காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 33 | Best Love Quotes in Tamil - 33
1. நீயும் நானும் ஒன்றாய் போகும்போது நீளும் பாதை இன்னும் நீள நெஞ்சம் ஏங்குதடி..
2. பிரிந்த காதல் சேராவிட்டாலும், பதிந்த நினைவுகள் ஒருபோதும் இதயத்திலிருந்து அழிவதில்லை..
3. எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின் கடந்த காலத்தை மறக்க வைக்க முடிகிறதோ, அவள் தான் அந்த ஆணின் மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்...
4. காதல் ஒரு அழகான உயிர்.. பலரிடம் வந்தாலும் சிலரிடமே வாழ ஆசைப்படுகிறது..!!
5. உண்மையான அன்பை புரிந்து கொள்ளும் ஒரு அழகான சந்தர்ப்பம் தான் பிரிவு..!
6. எந்த ஒரு பெண்ணையும் முழுமையாக புரிந்து கொள்ள முயற்சிக்காதே.. முடிவில், அந்த பெண்ணை காதலிக்க ஆரம்பித்து விடுவாய்.. அல்லது பைத்தியமாகி விடுவாய்..
7. என்னைப் பார்க்கும் போதெல்லாம் பொய்க்கோபம் கொள்கிறாய்.. எனக்குத் தெரியும் அது கோபமில்லை வெட்கம் என்று..
8. உன் விழிகள் பேசும் மொழியின் அர்த்தம் புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றேன் நான்.. அதற்க்கான அகராதியையும் நீயே எழுதிவிடு உன் கரு விழிகளால்..!!
9. காதலியை மனைவியாக்க துணிவு தேவை..! மனைவியை காதலியாக்க கனிவு தேவை..!!
10. ஒவ்வொரு முறையும் உன்னை நினைக்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்தை படைக்கச் சொன்னேன்... வெளியே வந்து பார் உன்னை எவ்வளவு நினைக்கின்றேன் என்று...