காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 38 | Best Love Quotes in Tamil - 38
1. அழகில் உனக்கும் எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது ஆனால் காதல் வைத்தால் எட்டும்
2. உன்னை வரைய முயற்சித்து வரையவே முடியவில்லை அழித்து அழித்து முனைகள் தேய்ந்த அழிரப்பர் முழு நிலவானது!
3. கடைசிச் சொட்டுவரை உறிஞ்சிக் குடித்துவிட்டு வைத்தாய் நிறைந்து வழிந்தது தேநீர்க் கோப்பையின் மனது
4. நீ புரண்டு படுக்கும்பொழுது நிகழ்கிறது ஓர் அழகுப் புரட்சி
5. என் கவிதைகளில் ஏதோ ஒரு கவிதையை நீ படிக்க நேர்ந்தால், அந்த கவிதைதான் என் கவிதைகளிலேயே சிறந்த கவிதை..
6. சராசரியாக ஒரு நிமிடத்தில் 38 புயல்கள் தோன்றுகின்றன இந்த பூமியில் இதில் எத்தனை புயல்கள் நீ சிரிப்பதால் தோன்றுகிறதோ...
7. ஒரு தானியங்கி கதவு போல நீ வந்தபோது திறந்து நீ உள்ளே சென்றதும் மூடிக்கொண்டுவிட்டது என் இதயம்
8. உன்னை வர்ணித்துப் பேசினால் காதில் பூ வைக்காதே என்கிறாய் உன் காதுகளே பூக்கள் தானே
9. சென்ட்ரல் ரயில் நிலையம் தென்றல் ரயில் நிலையமாகிவிடுகிறது நீ வந்திறங்கும்போதேல்லாம்!
10. கோவிலுக்கு நீ வரும் அழகைப் பார்பதற்க்காகத்தான் கோபுரத்தின் மேல் ஏறி நிற்கின்றன சிலைகள்!