காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 39 | Best Love Quotes in Tamil - 39
1. நீ குங்குமத்தைக் கோவில் தூணில் கொட்டினாய் விமோசனம் பெற்றது தூண்
2. பழக்கடைக்குள் நுழைந்த நீயோ ஆப்பிள்களைக் காட்டி 'இது எந்த ஊர் ஆப்பிள்' 'அது எந்த ஊர் ஆப்பிள்' என்று கேட்டுக்கொண்டிருந்தாய். ஆப்பிள்கள் எல்லாம் ஒன்று கூடி உன்னிடம் கேட்டன 'நீ எந்த ஊர் ஆப்பிள்?'
3. ஒரு கல் ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக்கொண்டால் காதல்!
4. ஆயிரங்கால் மண்டபத்தில் அழகான கால்கள் அதைக் காண வந்த உன் கால்களே
5. குயில்களை சோம்பேறியாக்காதே கொலுசுகளை கழற்றி வை
6. அவள் கண்களைப் பார்த்தால் மீன்? அவள் கண்கள் பார்த்தால் தூண்டில்!
7. உன் அழகு வெட்டி வைத்திருந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் நான்.
8. என் மனதைக் கொத்தி கொத்தி கூடு கட்டி குடியும் ஏறிவிட்ட மனங்கொத்திப் பறவை நீ
9. நீ ஏன் கடவுளுக்கு தீபம் காட்டுகிறாய் உன் முகத்தை காட்டினால் போதாதா
10. கோபுரத்தைப் பார்த்துவிட்டு நீ கேட்டாய்... இதுதான் ராஜகோபுரமா என்று... உன்னைப் பார்த்து கோபுரம் கேட்டது நீ தான் ராணி கோபுரமா என்று