காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 40 | Best Love Quotes in Tamil - 40
1. உனக்கு வங்கி வந்த நகையைப் பார்த்து 'அய்... எனக்கா இந்த நகை' என்று கத்தினாய். நகையோ 'அய்... எனக்கா இந்தச் சிலை' என்று கத்தியது.
2. உலகில் எதுவும் கட்டும்போது அழகாய் இருப்பதில்லை. நீ மட்டும் தான் கட்டும்போதே அழகாய் கட்டுகிறாய் உன் சேலையை
3. தான் வரைந்த ஓவியத்தை கடைசியாக ஒரு முறை சரி செய்யும் ஓவியன் போல் நீ ஒவ்வொரு முறையும் உன் உடையை சரி செய்கிறாய்.
4. காற்றோடு விளையாடிக் கொண்டிருந்த உன் சேலைத் தலைப்பை இழுத்து நீ இடுப்பில் சொருகிக்கொண்டாய். அவ்வளவுதான்... நின்றுவிட்டது காற்று.
5. என்னைப் பார்த்து யார் நீ என்று கேட்டுவிடாதே எனக்கு உன்னை மட்டும்தான் தெரியும் என்னைத் தெரியாது
6. அழகான பெண்களுக்கெல்லாம் திமிர் இருக்குமென்றாலும் உனக்கிருக்கும் அழகே உன் திமிர் தான்
7. என்னைத் திருந்தச் சொல்லாதே உன்னிடம் திட்டு வாங்குவதற்காகவே தவறு செய்பவன் நான்
8. வெகுநேரமாய் மகிழ்ச்சியோடு உன்னுடன் கைபேசியில் பேசிக் கொண்டிருக்கையில் ஒரு கவலை எனக்கு... இவ்வளவு நேரமும் அது உன் கன்னத்தைத் தொட்டுக் கொண்டுதானே இருக்கும் என்று
9. புவியின் ஈர்ப்பு விசையில் எப்போதாவது தவறி விழுந்திருக்கின்றேன். உனது விழியின் ஈர்ப்பு விசையில் எப்போதும் தவறாமல் விழுந்து கொண்டிருக்கின்றேன்.
10. பகலை விட இரவில் மேகங்கள் மெதுவாகவே நகர்கின்றன நீ தூங்கும்போது பூமியே மெதுவாகச் சுற்றும்போது மேகம் மட்டும் என்ன செய்யும்.