காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 44 | Best Love Quotes in Tamil - 44
1. காதல் ஒரு கண்ணாமூச்சி ஒருவர் கண்களை மற்றவர் கண்களால் மறைதுக்கொள்கிறார்கள்
2. நமது உடலில் ஒரு சதவிதம் தண்ணீர் குறைந்தாலும் உடனே நம் நாக்கு வறண்டு போகும் உன் மீதான காதலில் அரை சதவிதம் குறைந்தாலும் உடனே என் உயிர் வறண்டு போகும்
3. உன்னை நினைக்க வேண்டாம் என்று என் மனம் சொல்கிறது.. ஆனால் அந்த மனது தான் எப்போதும் உன்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறது..!!
4. உனது இதயத்தில் எனக்கான இடத்தை யாரையோ வைத்து நிரப்பியவனாய் நீ..!! ஆனால் உன்னுடைய இடத்தை யாரையும் நிரப்ப விடாதவளாய் நான்..!!
5. ஒரு இதயத்தை உண்மையாக நேசித்து பார்.. ஆயிரம் இதயங்கள் உன் அருகில் இருந்தாலும் உன் கண்கள் நீ நேசிக்கும் இதயத்தை மட்டும் தேடும்..
6. பூவின் மீது விழுந்த மழைத்துளி மேலும் அழகானது போல், என்மீது விழுந்த உன் அன்பும் ஒவ்வொரு நொடியும் பேரழகாய் தெரிகிறது...
7. கண்கள் திறக்கும் வரை தான் கனவு நீடிக்கும்.. ஆனால் என் கண்கள் மூடும் வரை உன் நினைவு நீடிக்கும்..
8. பெண்களின் காதல் பூவிலுள்ள பனித்துளி போல அழகானது. ஆண்களின் காதல் வேரில் உள்ள நீரைப்போல ஆழமானது...
9. பொய்யாக நேசிப்பவர்கள் கூட சந்தோஷமாக இருக்கின்றனர். உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகம் காயப்படுகின்றனர்..
10. நான் இல்லாத தனிமைகள் ஒருபோதும் உன்னை தாக்கவில்லை என்றால் நான் உன் நினைவுகளில் இல்லையென்று ஒப்புக்கொள்கிறேன்..!!