காதலை பற்றிய சிறந்த தமிழ் பொன்மொழிகள் - 42 | Best Love Quotes in Tamil - 42
1. எல்லா கவிதைகளுமே உன்னை பற்றியவைதான் எனினும், ஒரு கவிதைகூட உன்னை மாதிரி இல்லையே..
2. இந்தியாவின் ரோஜா தலைநகரம் பூனே ரோஜாக்களின் தலைநகரம் உன் கூந்தல்
3. நான் வழிபட இந்த உலகத்தில் எத்தனையோ கடவுள்கள் இருக்கிறார்கள். நான் பின்பற்ற இந்த உலகத்தில் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. ஆனால் நான் காதலிக்க இந்த உலகத்தில் நீ மட்டும்தான் இருக்கிறாய்.
4. பல நூற்றாண்டுகள் ஆகுமாமே ஒரு வைரம் உருவாக, நீ மட்டும் எப்படி பத்தே மாதத்தில் உருவானாய்.
5. இந்த வேப்பமரத்தின் பழங்கள் இனிக்கிறதே என்றாய் இனிக்காதே பின்னே... இப்படி நீ மரத்தில் ஊஞ்சல்கட்டி ஆடினால்.
6. யாரும் வெளியில் கிளம்பும்போது எதிரில் தலைவிரி கோலமாய் நிற்காதே மயில் தோகை விரித்தால் மழை வருமென்று பயந்து வெளியில் கிளம்பாமலேயே திரும்பி விடுவார்கள்..
7. உன்னோடு சதுரங்கம் ஆட நான் வரமாட்டேன் நீ இரண்டு ராணியோடு ஆடுவாய் உன்னையும் சேர்த்து..
8. தொலைபேசியில் எல்லாம் நீ எனக்கு முத்தம் தராதே அது உன் முத்தத்தை எடுத்து கொண்டு வெறும் சத்தத்தை மட்டுமே எனக்கு தருகிறது.
9. என் கவிதைகளில் ஏதோ ஒரு கவிதையை நீ படிக்க நேர்ந்தால், அந்த கவிதைதான் என் கவிதைகளிலேயே சிறந்த கவிதை..
10. உலக அழகி பட்டமெல்லாம் உனக்கெதற்கு நீ உலகையே அழகாக்குபவள்.