நீங்கள் நீங்களாக இருங்கள் | அறிவுரை | Advice quotes in Tamil - 07
61.சில சமயம் முட்டாளாய் காட்சியளிப்பது அறிவுள்ள செயல்.
-தாமஸ் ஆல்வா எடிசன்
62.ஒரு மனிதனை மதிப்பீடு செய்ய, அவரது ஒவ்வொரு செயலையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
-கலீல் ஜிப்ரான்
63.பார்க்க கண்களை கொடுத்த ஆண்டவன் பாராதிருக்க இமைகளையும் கொடுத்திருக்கிறான். இரண்டையும் சரியான சமயத்தில் பயன்படுத்துபவன் புத்திசாலி.
-எமேர்சன்
64.நீங்கள் நீங்களாக இருங்கள். முகமூடி அணியாதீர்கள்.
-லூயிஸ் ஸ்டீவன்சன்
65.பழைய காலத்தைப் போல நாம் நடக்க முடியாது. நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம் தயாராக்கிக்கொள்ளவேண்டும்.
-அறிஞர் அண்ணா
66.எவருக்கும் தானாகப் போய் புத்திமதி சொல்லாதீர்கள், நீங்கள் அழைக்கப்பட்டால் தவிர எதிலும் தலையிடாதீர்கள்.
-சிவானந்தா
67.அடுத்தவனுக்கு குழி தோண்ட நினைக்கும் நேரத்தில் தனக்கு அஸ்திவாரமே கட்டிக்கொள்ளலாம்.
-வைரமுத்து
68.வாய்ப்புகள் தடைகளைப்போல மாறுவேடம் போட்டுக் கொண்டு வரும். ஆகவேதான் பெரும்பாலான மக்கள் அவற்றை உணருவதில்லை. பெரிதாகத் தடை இருக்குமானால் வாய்ப்பும் பெரியதாக இருக்கும் என்பதை நினைவு வைத்துக் கொள்ளுங்கள்.
-ஷிவ் கெரா
69.யோசிப்பதானால் ஆழமாக யோசியுங்கள். செயல்படுத்துவதானால் தீவிரமாக செயல்படுத்துங்கள். விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுங்கள். எதிர்ப்பதானால் கடைசிவரை எதிர்த்துக் கொண்டிருங்கள்.
-எமேர்சன்
70.நீங்கள் நன்மை செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தீமை செய்வதை நிறுத்துங்கள்.
-லியோ டால்ஸ்டாய்