புரியாத விஷயத்தை | அறிவுரை | Advice quotes in Tamil - 09
81.பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.
-ஷேக்ஸ்பியர்
82.புரியாத விஷயத்தைப் புகழ்வது தப்பு. இகழ்வதோ அதைவிட பெரிய தப்பு.
-வால்டேர்
83.நீங்கள் கற்றுக்கொள்ளும்போது, கற்பியுங்கள்; நீங்கள் அடையும்போது, கொடுத்தளியுங்கள்.
-மாயா ஏஞ்சலோ
84.இந்த உலகில் நீங்கள் சில காலம் தங்க வந்திருக்கும் விருந்தினர்தான். எனவே விருந்தாளின் வீட்டில் எப்படி கட்டுப்பாட்டுடனும் அடக்கத்துடனும் நடந்து கொள்வீர்களோ அதுபோலவே நடந்து கொள்ளுங்கள்.
-சுப்பிரமணிய பாரதியார்
85.காண்பது அனைத்தையும் சந்தேகம் கொண்டு பார்
-லெனின்
86.உடம்பிலே வலுக்குறைந்து பலவீனம் வரும்போது உடமைகளையும் பொறுப்புகளையும் பிள்ளைகளிடம் கொடுத்துவிட வேண்டும். அவ்வாறு கொடுக்காது, தானே சுமந்தால் உலகம் சிரிக்கும் பிள்ளைகளும் பெற்றவனை மதிக்கமாட்டார்கள்.
-மாண்டெயின்
87.தீர்வுகளில் கவனம் செலுத்துவதே முக்கியம்; பிரச்சினைகளில் அல்ல.
-டோனால்ட் டிரம்ப்
88.தேவையில்லாதபோது வாயை மூடிக்கொள்ளுங்கள், சரியான சந்தர்ப்பம் வரும்போது சொல்லுங்கள். சொல்வதை தீப்பொறி எழச் சொல்லுங்கள்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
89.இந்த உலகமே உன்னை திரும்பி பார்க்க வேண்டுமென்றால் நீ யாரையும் திரும்பி பார்க்காதே.
-அடால்ஃப் ஹிட்லர்
90.அசாதாரணமான வாய்ப்புகளுக்காகக் காத்திருக்க வேண்டாம்; பொதுவான சந்தர்ப்பங்களை கைப்பற்றி, அவற்றை சிறந்ததாக மாற்றுங்கள்.
-ஒரிசன் ஸ்வெட் மார்டென்