உன்னுடைய எதிரிக்கும் | அறிவுரை | Advice quotes in Tamil - 10
91.உன்னுடைய எதிரிக்கும் உபகாரம் செய். உனக்குத் தீங்கு செய்தோருக்கும் நன்மையே செய்.
-இயேசுநாதர்
92.கவலையைக் கடன் வாங்குவது உன் இயல்பாக இருக்கலாம். ஆனால் அதை அடுத்தவனுக்குக் கடன் கொடுக்காதே.
-இரட்யார்ட் கிப்ளிங்
93.எது உண்மை, எது நல்லது என்று நீ நினைக்கிறாயோ அதை உடனே நிறைவேற்றுவதே நல்லது.
-சுவாமி விவேகானந்தர்
94.நம்மை நாமே வெறுக்காமல் இருப்பது நமது முதல் கடமை.
-சுவாமி விவேகானந்தர்
95.வாழ்வில் உன் தேவையைப் பூர்த்தி செய்து கொண்டாய், திருப்தியடைந்தாய், விலகிக் கொள். உண்டவன் பந்தியைவிட்டு பசிக்கிறவனுக்கு இடம் கொடுப்பது போன்றது தான் வாழ்வும், சாவும்.
-மாண்டெயின்
96.நம்முடைய தேவைகள் மிகக் குறைந்தனவாக இருக்க வேண்டும். பிறர் சார்பின்றி நாமாகவே அவற்றைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இதை விட நேர்த்தியான விஷயம் உலகில் வேறு உண்டா?
-எமேர்சன்
97.நம் எழுத்தாலோ அல்லது பேச்சாலோ பிறரை நம் பக்கம் இழுக்க வேண்டும் என்று தேவையில்லை. மனதுக்கு எது சரியெனப் படுகிறதோ அதைச் செய்வோம். பிறர் எப்போது வேண்டுமானாலும் திறந்து பார்க்கக் கூடிய திறந்த புத்தகமாக நம் வாழ்கை இருக்கட்டும்
-மகாத்மா காந்தியடிகள்
98.இழிசெயல்கள் எதுவும் உங்களைப் பிடித்து தம்வழி இழுத்துக் கொண்டு செல்லாதபடி சதாகாலமும் விழிப்புடன் இருப்பீர்களாக, பயமின்றி உழையுங்கள். சலிப்புக்கு மட்டும் ஒருபோதும் இடம் கொடாதீர்கள்.
-சுப்பிரமணிய பாரதியார்
99.நீ எந்த மாற்றத்தை விரும்புகிறாயோ? அந்த மாற்றத்தை உன்னில் இருந்தே தொடங்கு.
-மகாத்மா காந்தியடிகள்
100.உணவை அருந்தும்போது அவசரமும் கூடாது; பொறுமையும் கூடாது.
-கிருபானந்த வாரியார்