அனைத்து தவறுகளுக்கும் | அறிவுரை | Advice quotes in Tamil - 11
101.மனிதன் தன் மனதில் எழும் கேள்விகளுக்குத் தனக்குத்தானே பதில் அளிக்கக்கூடிய பயிற்சியைப் பெற வேண்டும். வேத நூலைப் படிப்பதினால், தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.
-இங்கர்சால்
102.அனைத்து தவறுகளுக்கும் முக்கியக் காரணம் தற்பெருமைதான். அதனால் தற்பெருமை பேசுவதை உடனே நிறுத்துங்கள்.
-பிரான்சிஸ் பேக்கன்
103.நிறைய விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொள்வதை விட குறைந்த விஷயங்களைச் சரியாகப் புரிந்து கொள்வதே சிறந்தது.
-அனடோல் பிரான்ஸ்
104.மனத்தினால் தீமையை மறப்பது மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தீமையை விலக்கி, அதனை அறிதல் வேண்டும். நன்மையை மனத்தினால் அங்கீகரித்தால் மட்டும் போதாது. விடமுயற்சியினால் ஒவ்வொரு நாளும் நன்மையைச் செய்து, அதனை அறிதல் வேண்டும்.
-ஜேம்ஸ் ஆலன்
105.நாத்திகர்கள் கூட இஷ்டதெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று.
-சுப்பிரமணிய பாரதியார்
106.தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்
-சோரென் கீர்கேகார்ட்
107.அடுத்தவனின் பாதையைப் பின்பற்றாதே உன்னுடைய பாதையைக் கண்டுபுடி.
-சுவாமி விவேகானந்தர்
108.சூரிய உதயத்திற்கு முன் எழுவது வாழ்க்கையைப் பிரகாசமாக்கும்.
-ஔவையார்
109.எந்தச் சூழ்நிலையிலும் மற்றவருக்கு நீ தாழ்ந்துவிடதே. அவ்வாறு தாழ்வது அவமானத்திற்குரியதாகும்.
-சுப்பிரமணிய பாரதியார்
110.நன்றியை எதிர்பார்க்காதிருக்கப் பழகிக் கொள்வோம் எப்போதாவது அது கிடைக்கும்போது எதிர்பாராத பரிசாக அது இன்பம் தரும்.
-டேல் கார்னகி