ஒருவன் நன்றாக | அறிவுரை | Advice quotes in Tamil - 14
131.உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.
-கண்ணதாசன்
132.நாக்கு ஒரு தீ. ஆக்கவும் அழிக்கவும் வல்லது கவனமாக பயன்படுத்துங்கள்
-அரிஸ்டாடில்
133.மனித சமுதாயத்தை ஒரே நாளில் சீர்திருத்திவிட முடியாது. அதற்கு நீண்ட காலம் பிடிக்கும். ஒவ்வொருவரும் தம்மைச் சமுதாயச் சீர்திருத்தவாதி என்று நினைத்துக் கொள்ள வேண்டும். சகோதர மனிதனுக்கு உங்களால் செய்ய முடிந்த நன்மைகளையெல்லாம் செய்யுங்கள்.
-இங்கர்சால்
134.நீங்கள் எப்பொழுதும் நான்கு விஷயங்களை மட்டும் உடைத்துவிடாதீர்கள் அதாவது, நம்பிக்கை,சத்தியம்,உறவு,இதயம் ஏனெனில் இதில் எதையாவது உடைத்தால் சத்தம் கேட்காது ஆனால் வலி அதிகமாக இருக்கும்.
-சார்லஸ் டிக்கின்ஸ்
135.தனக்கு எவ்வளவு தேவை என்பதைவிட தன்னிடம் எவ்வளவு உள்ளது என்பதை ஒரு மனிதன் எப்போதும் கருத்தில் கொள்ளவேண்டும்.
-ஜோசப் அடிசன்
136.ஒருவன் நன்றாக முன்னால் தாண்டிக் குதிக்க வேண்டும் என்றால், அதற்காகப் பின்னாலும் போகத்தான் வேண்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
137.நிறைய அறவுரைகளை விட சிறிதளவாக இருந்தாலும் கடைபிடித்தல் என்பது சிறந்தது.
-மகாத்மா காந்தியடிகள்
138.தேவையில்லாதவற்றை விலைக்கு வாங்கினால் தேவையுள்ளவற்றை விரைவில் விற்க நேரிடும்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
139.பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு, செயலில் உறுதி ஆகிய மூன்றும் உள்ளவர் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.
-தாமஸ் புல்லர்
140.களத்திற்கு வந்தபிறகு நீ கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்க முடியாது
-வைரமுத்து