பூமியில் செருக்காக | அறிவுரை | Advice quotes in Tamil - 12
111.பூமியில் செருக்காக நடக்காதீர்கள், ஏனனெனில் உங்களால் பூமியை பிளந்துவிட முடியாது, மலையளவிற்கு உயர்ந்துவிடவும் முடியாது.
-கதே
112.தவிர்க்க முடியாத ஒன்றைப் பற்றி ஏன் வீணாகக் கவலைப்படுகிறீர்கள்? இறப்பு வருவதற்கு முன்பே ஏன் இறக்கிறீர்கள்?
-மகாத்மா காந்தியடிகள்
113.அபாரமான சாதனைகளை நிகழ்த்துவதில் ஆழமான ஈடுபாடு கொள்ளுங்கள். உடனே கிடைக்கும். செயற்கையான சந்தோஷத்தை துரத்தி அலையாதீர்கள்.
-அப்துல் கலாம்
114.தொலைவில் இருப்பதைப் பார்த்துத் தயங்குவதில் பயன் எதுவுமே இல்லை. அருகில் இருப்பதைச் செய்து முடிப்பதே தலையாய பணி.
-தாமஸ் கார்லைல்
115.கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நிஜமாகும் ஒரு தினமே!
-கண்ணதாசன்
116.இப்போதைய ஒரு சிறு முடிவு, உங்களுடைய நாளைய அனைத்தையும் மாற்ற முடியும்.
-ராபர்ட் ஹரோல்ட் ஷூல்லெர்
117.குறைந்த பேச்சு, நிறைந்த கேள்வி, தனித்த சிந்தனை, தம் கருத்தில் ஐயுறவு, பிறர் கருத்தில் மதிப்பு இவை மனிதன் பின்பற்ற வேண்டிய சிறந்த விதிகள்.
-கன்பூசியஸ்
118.பிறரிடமுள்ள அழகு, பணம் அறிவைக் கண்டு பொறாமைப்படாதே; அதுவே மனோ வியாதிக்கு வழி வகுக்கும்.
-மாண்டெயின்
119.வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது. அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமே வேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம்.
-சிவானந்தா
120.உங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குத் திட்டவட்டமான தீர்மானங்களை எடுப்பதற்கு பதிலாக, சாக்குப் போக்குகளை ஒருபோதும் சார்ந்திருக்காதீர்கள்.
-நெப்போலியன் ஹில்