ஏராளமான வாய்ப்புகள் | அறிவுரை | Advice quotes in Tamil - 13
121.ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
-கண்ணதாசன்
122.நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை பெறுவதில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
123.யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யாதீர்கள். எவரும் உங்களுக்குத் தீங்கிழைக்கவும் அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் ஒரு புதிய மானிட உலகை நம்மால் உருவாக்க முடியும்.
-ஓஷோ
124.சின்ன சின்ன நல்ல விஷயங்களைச் சேர்த்துக்கொண்டே முன்னேறுங்கள், அதுவே இறுதியில் நம்மை முழுமையானதாக மாற்றுகின்றது.
-ஜிம் ரோஹன்
125.நீ யாருக்கும் பக்கத்திலிருக்கதே; தூரத்திலேயே இரு.
பக்கத்தில் இருக்கும் இமையைப் பார்க்க முடியாத கண்கள், தூரத்தில் இருக்கும் நட்சத்திரத்தைப் பார்த்து விடுகின்றன.
-கன்பூசியஸ்
126.நீங்கள் முதலில் நல்லவனாய் வாழுங்கள்; கெடுதல்கள் எல்லாம் பறந்துபோய்விடும். உலகம் முழுவதும் மாறிவிடும்.
-சுவாமி விவேகானந்தர்
127.பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் எடுத்துவிடாதீர்கள், அனைவற்றையும் ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்!!
-சார்லஸ் டிக்கின்ஸ்
128.நீங்கள் ஒரு விஷயத்தை நன்றாக செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் அதை நீங்களே செய்யுங்கள்.
-நெப்போலியன் பொனபார்ட்
129.திருமணம் செய்து கொள்வதற்கு முன் கண்களை நன்றாகத் திறந்து வை. அதன்பின் பாதிக்கண் மூடியிருக்கட்டும்.
-தாமஸ் புல்லர்
130.நல்லவராய் இருப்பது நல்லது தான். ஆனால் நல்லது எது, கெட்டது எது என்று தெரியாத நல்லவராய் இருப்பது மிக ஆபத்தானது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா