மற்றவர்களை கீழே தள்ளிவிட்டு | அறிவுரை | Advice quotes in Tamil - 16
151.தோல்வி வரும் போது அதற்க்கு இதயத்தில் இடம் கொடுக்காதே.
வெற்றி வரும் போது அதற்க்கு தலையில் இடம் கொடுக்காதே.
-கன்பூசியஸ்
152.அடிப்பட்டவன் உன்னைத் திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம் எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன் மன்னிப்பதுமில்லை, மறப்பதுமில்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
153.அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள், உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள், உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள்.
-கி.வீரமணி
154.மற்றவர்களை கீழே தள்ளிவிட்டு நீ ஏணியில் ஏற முயற்சி செய்யாதே.
-வால்டேர்
155.உங்கள் வாக்குறிதியை நீங்கள் காப்பாற்ற விரும்பினால் எந்தவொரு வாக்குறுதியையும் கொடுக்காதீர்கள்.
-நெப்போலியன் ஹில்
156.வீழ்ச்சியில் கலக்கமோ எழுச்சியில் மயக்கமோ கொள்ளாதே
-இங்கர்சால்
157.செய்த தவறுக்காக வருந்தி மன்னிப்புக் கேட்கும் பழக்கத்தை நமது குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
-கி.வீரமணி
158.பகையோ, குறை கூறலோ அணுக முடியாது, உன்னை நீயே பெரியவனாக்கிக் கொள்.
-எமேர்சன்
159.உன் குழந்தையை முதல் ஐந்து வருடங்கள் செல்லமாக வைத்துக்கொள்.
அடுத்த ஐந்து வருடங்களும் திட்டி தீர்த்துக்கொள்.
பதினாறு வயதை எட்டும் போது உன் நண்பனைப் போல நடத்து.
தலைக்கு மேல் வளர்ந்துவிட்ட உன் பிள்ளைகள் தான் உனக்கு உற்ற நண்பர்கள்.
-சாணக்கியர்
160.எதிரியையை அலட்சியம் செய்தால் அவனைவிட உயர்ந்தவன் ஆவோம்
-தாமஸ் புல்லர்