அழகான பெண்ணை | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 05
1. மகன்களை பெற்ற அம்மாக்களுக்கு மட்டுமே தெரியும்.. அவனை மளிகைக்கடைக்கு அனுப்பினால் மீதி காசு வராது என்று..
2. நிலவையும் விண்ணையும் பிரிப்பது அமாவசை. என்னையும், அவளையும் பிரிப்பது அவள் அம்மாவின் ஆசை.
3. என் வாழ்க்கையில் நான் சிறப்பாக எதுவும் செய்தது இல்லை. வாழ்க்கை தான் என்னை வைத்து மிக சிறப்பாக செய்து கொண்டு இருக்கிறது.
4. இட்லியின் சுவை இட்லியில் இல்லை. தொட்டுக்க வைக்கிற சட்னியில் தான் இருக்கு. அது போல தான் வாழ்க்கையும். நம்ம கூட வாழ்பவர்களை பொறுத்து தான் சந்தோஷம்
5. அழகான பெண்ணை பார்த்த உடனே நம்ம மனசுக்குள்ள ஒரு பட்டாம் பூச்சி பறக்குமே, அத புடிச்சி சாகடிச்சிட்டா போதும் வாழ்க்கைல முன்னேறிடலாம்.
6. கடவுள் படைச்சதுலயே ரெண்டே உருப்படியான விஷயம்.. ஒன்னு சனிக்கிழமை.. இன்னொனு ஞாயிற்றுகிழமை..
7. ஒவ்வொரு வீடாக ஏறி பத்திரிக்கை வைத்த காலம் போய்.. ஒவ்வொரு குரூப்பில் பத்திரிகையை பதிவிடும் காலத்தில் இருக்கிறோம்...!
8. தோல்வி என்பது வெற்றிக்கு முதல் படி.. நமக்கு மட்டும் நிறைய படி வச்சிட்டாங்க போலிருக்கு..
9. நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது.. அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்.
10. யானையிடம் இருந்து 100 அடி விலகி இருங்கள். கொம்பு உள்ள மிருகத்திடம் இருந்து 10 அடி விலகி இருங்கள். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்யும் மனிதர்கள் இருக்கும் ஊரை விட்டே விலகி இருங்கள்.