வசதியாக வாழ வேண்டும் | Motivational quotes in Tamil – 03
1. வசதியாக வாழ வேண்டும் என உழைப்பதை விட வறுமை இல்லாமல் வாழவேண்டும் என உழைப்பதே மிகவும் சிறந்தது.
2. நீ அடுத்தவனை அழிக்க நினைத்தால் உன்னை அழிக்க ஒருவன் வந்து கொண்டிருப்பான்..
3. உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை... அதைப் பற்றிய பயம் தான் மனதைக் கலக்கி அறிவை குழப்பி நம்மை நிலைக்குலையச் செய்துவிடுகிறது.
4. குத்திக்காட்டும் மனிதர்களுக்கும், சுட்டிக்காட்டும் மனிதர்களுக்கும் இடையில் சிரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டுவது தான் சவாலான வாழ்க்கை...
5. அறிவு என்பது கொல்லன் பட்டறை ஈட்டியைப்போல், அவ்வப்போது தீட்டப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
6. ஒரு மடங்கு திறமை.. இரு மடங்கு தேடல்.. மூன்று மடங்கு பொறுமை.. என்ற விகிதத்தில் உங்களை நீங்கள் தயார் படுத்தினால் மட்டுமே உங்கள் லட்சியத்தின் இலக்கை நீங்கள் அடைய முடியும்...!
7. நடந்துவந்த பாதைகளெல்லாம் முள்வேலிதான்... நடக்கின்ற பாதைகளும் கரடு முரடுதான்.. நடக்கப்போகும் பாதைகளும் துன்பம் துயரம்தான். நம்பிக்கை ஒன்றே நம் காலணி. நினைவுகள் மட்டுமே நிவாரணம்.
8. என்ன நடக்குமோ எது நடக்குமோ என்று யோசித்துக் கொண்டிருப்பதை விட முயற்சித்துப் பார். கிடைத்தால் வெற்றி.. இல்லாவிட்டால் அனுபவம்.. இரண்டுமே நமக்கு தேவை தான்..
9. எந்த சிக்கலுமே உன்னை சிதைக்க வந்தது அல்ல.. செதுக்க வந்ததே..
10. எதை நீ இழந்தாலும் மனம் தளர்ந்து விடாதே. உனக்கும் இன்னும் எதிர்காலம் இருக்கிறது..!