யாராவது | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 06
1. ஆடிப்போய் ஆவணி வந்தா டாப்புல வராதவன் கூட.., செல்போன புடுங்கி அடுப்புல போட்டா டாப்புல வந்துருவான்..2. இரண்டு அடியில் சொல்லி புரியவைப்பவர் திருவள்ளுவர்.. ஒரே அடியில் சொல்லி புரியவைப்பவள் மனைவி..!
3. யாராவது அட்வைஸ் பண்ணா பொறுமையா உட்கார்ந்து கேட்கணும். இல்லனா அதுக்கும் சேர்த்து அட்வைஸ் பண்ணுவாங்க.
4. சனிக்கிழமை இரவு தூங்கப்போகும் போது இருக்கும் சந்தோஷம்.. ஞாயிற்றுக்கிழமை இரவு இருப்பதில்லை..
5. உசுப்பேத்துரவன் கிட்ட உம்முனும் கடுப்பேத்துரவன் கிட்ட கம்முனும் இருந்தா நம்ம வாழ்க்கை ஜம்முனு இருக்கும்..
6. வாழ்க்கையில எந்த பிரச்சனையாக இருந்தாலும் FEEL பன்றதை விட, அது எதுவாக இருந்தாலும் பரவாயில்லனு DEAL பன்றது நல்லது.
7. ஒரு அழகிய பெண் கண் இமைக்காமல் உங்களை மட்டுமே உற்று பார்த்தால். அவளுக்கு குரு பெயர்ச்சியும் உங்களுக்கு சனி பெயர்ச்சியும் நடக்குது என்றே அர்த்தம்.
8. அனைத்தையும் மறந்துவிட்டு திட்டு வாங்குவது ஆண்.. அனைத்தையும் ஞாபகம் வைத்து திட்டுவது பெண்
9. வாழ்க்கைல சோகங்கள் அடைமழையா விழுந்தாலும் சரி, ஆலங்கட்டி மழையா விழுந்தாலும் சரி.. சும்மா எருமமாட்டுல மழை பெஞ்ச மாதிரி அசையாம நிக்க கத்துக்கனும்..
10. சிலந்தியும் நாமும் ஒன்றுதான். ஏனென்றால்.. அதிக நேரம் ’நெட்’லேயே இருக்கிறோமே..!