ஆசைப்படுவதை மறந்துவிடு | Quotes about Desire in Tamil - 02
12.சாதனைகளுக்கான முதல் படி தீவிரமான ஆழ்ந்த ஆசைதான்.
-நெப்போலியன் ஹில்
13.ஆசைபடுவதை மறந்துவிடு ஆனால் ஆசைப்பட்டதை மறந்துவிடாதே.
-சார்லி சாப்ளின்
14.எப்போது உங்கள் ஆசைகள் போதுமான வலுவுடன் இருகின்றதோ, அப்போது அதனை அடைவதற்கான அதிகபட்ச சக்தி உங்களுக்குக் கிடைக்கின்றது.
-நெப்போலியன் ஹில்
15.மாமரம் நிரம்பப் பூக்கிறது, ஆனால் அவ்வளவுமா பழங்களாகின்றன. வாழ்க்கை மரமும் அப்படித்தான். அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன, ஆனால்?
-காண்டேகர்
16.அளவில்லாத ஆசை, நமது நல்ல குணங்களை அழித்து விடும்.
-மகாவீரர்
17.மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம் ஆசையே.
-வள்ளலார்
18.ஆசையை வென்ற மனிதனை இந்த உலகத்தில் எவராலும் வெல்லமுடியாது.
-கௌதம புத்தர்
19.சிலந்தி தன் வலைக்குள்ளேயே சுற்றுவதைப் போல் மனிதர்கள் ஆசைகுள்ளே கட்டுண்டிருக்கின்றனர்.
-கௌதம புத்தர்
20.மாமரம் நிரம்பப் பூக்கிறது ஆனால் ஆவ்வளவுமா பழங்களாகின்றன? வாழ்கை மரமும் அப்படித்தான் அதில் ஆசைப் பூக்கள் நிரம்பப் பூக்கின்றன ஆனால் அனைத்தும் நிறைவடைவதில்லை.
-காண்டேகர்
21.ஈரமுள்ள குச்சி தீப்பற்றாது. அதுபோல் உலக ஆசை கொண்டவனுக்குக் கடவுள் அருள் கிட்டாது.
-இராமகிருஷ்ணர்
22.பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்
-டிஸ்ரேலி