ஆசிரியர் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Quotes about Teachers
1.ஒளிரும் தீப்பந்தத்தை வைத்திருப்பவர்கள் மற்றவர்களுக்கு கொடுப்பதுபோல் ஆசிரியர்கள் திகழ்கிறார்கள்.
-பிளேட்டோ
2.குழந்தைகளுக்குக் கல்வி புகட்டுவோர் பெற்றோர்களையும் விட பெருமதிப்புக்கு உரியவர்கள். பெற்றோர்கள் உயிர் மட்டுமே அளிக்கிறார்கள், ஆசிரியர்களோ நல்வாழ்வு வாழும் கலையை கற்றுத் தருகிறார்கள்.
-அரிஸ்டாடில்
3.அறிவை ஆனந்தமாக போதிக்க கற்றவனே அற்புதமான ஆசிரியன்
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
4.குருவின் அருளால் சீடன் நூல்களின்றியே அறிஞன் ஆகிறான்.
-சுவாமி விவேகானந்தர்
5.நமக்கு கற்றுக் கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்ல. யாரிடம் நாம் கற்றுக் கொள்கிறோமோ அவரே நமக்கு ஆசிரியர்.
-கதே
6.தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது.
-தந்தை பெரியார்
7.மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசானே என்பது உறுதியான நம்பிக்கை.
-மகாத்மா காந்தியடிகள்
8.அறிவு முற்றும் வரையில் கற்பதிலேயே மாணவர்கள் மனத்தைச் செலுத்த ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும்.
-தந்தை பெரியார்