வருஷா வருஷம் | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 07
1. ஞாயிற்றுகிழமை நல்லா போகணும்னு வாழ்க்கையில் ஒரு எதிர்பார்ப்பு இருக்கலாம். ஆனா நாளைக்கு திங்கள்கிழமை என்கிற பயம் இருக்க கூடாது.
2. ஒரு நாள் சிரித்தாய், மறுநாள் வெறுத்தாய். எனை நீ கொல்லாமல் கொன்று புதைத்தாயே.. திருந்துவாயா?
3. வாழ்க்கை என்பது வாழைப்பழம் மாதிரி.. சாப்பிட்டா சத்து.. வழுக்கி விழுந்தா டெத்து..
4. வாழ்க்கை வட்டமா, கட்டமானு தெரியாது.. ஆனா.. ரொம்ப கஷ்டம்னு மட்டும் நல்லா தெரியுது..
5. ஓர் திருமணமான ஆண் வெளியில் சிங்கமாக இருந்தாலும், வீட்டினுள் அவன் மனைவியின் சிம்மாசனம் தான்..!
6. நாம சாதிக்கனும்னு கண்ணு முழிச்சா.. கடவுள் நம்மள சோதிக்கனும்னு கண்ணு முழிப்பார் போல..
7. கடல்ல விழுந்தாலும் காதல்ல விழுந்தாலும் கடைசில கிடைக்கிறது சங்கு தான்..
8. நாட்டில் எப்படி வரி முக்கியமோ, அது மாதிரி.. ஞாயிற்றுகிழமை வீட்டில் கறி முக்கியம்..
9. வருசா வருசம் குளிர் காலம் வருது, வெயில் காலம் வருது, மழை காலம் வருது.. ஆனா, நமக்கு ஒரு விடிவு காலம் வரமாட்டெங்குது..
10. நம்ம மூளை இருக்குதே அது நம்ம மறக்கனும்னு நினைக்கிறத ஞாபகத்துல வச்சிக்குது.. ஞாபகத்துல வச்சிக்கனும்னு நினைக்குறத மட்டும் டக்குனு மறந்துடுது..