Type Here to Get Search Results !

வெற்றியும் தோல்வியும் | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 7



வெற்றியும் தோல்வியும்   | மேதைகளின் வரிகள் | Geniuses Motivational Quotes in Tamil - 7



1. ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.
- Periyar E. V. Ramasamy

2. மரணத்தின் வயது என்ன? இரண்டு கணம் கூட இல்லை. வாழ்க்கையின் தொடர்ச்சிகள் இன்று நேற்று வந்தவை அல்ல. வேண்டிய அளவு வாழ்ந்தாயிற்று. மனதைத் தொலைத்து விட்டு மீண்டும் நான் வருவேன். கேவலம் மரணத்திடம் ஏன் பயம் கொள்ள வேண்டும்? மரணமே! திருட்டுத்தனமாக பதுங்கிக்கொண்டு வராதே. என்னை எதிர்கொண்டு நேரடியாக பரிட்சித்துப் பார்.
- Atal Bihari Vajpayee

3. வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் பகுதிகள் தான். அவற்றை பக்குவத்துடன் சமநிலையில் அணுக வேண்டும்.
- Atal Bihari Vajpayee

4. கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை, கனவு மட்டுமே காண்பவர்கள் தான் தோற்கிறார்கள்.
- A. P. J. Abdul Kalam

5. பிறந்த குழந்தைக்கூட அழுகை எனும் புரட்சி செய்துதான் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்கிறது.
- Nethaji Subash Chandra Bose

6. எதையும் தெரியாது என்று சொல்லாதே. சாதிக்கும் துணிவோடு அஞ்சாத போர்வீரனைப் போல செயல்படு.
- Swami Vivekananda

7. "நாட்டின் குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்த நாடும் உண்மையில் மேம்பாடு அடைய முடியாது."
- Nelson Mandela

8. நாளைக்கு நல்ல காரியம் செய்வேன் என்று சொல்பவன் முட்டாள்; அறிவுள்ளவன் நேற்றே அதைச் செய்து முடித்திருப்பான்.
- Alfred Marshall

9. ஓயாமல் உழைத்த ஒரு தமிழன் இங்கே ஓய்வெடுத்துக் கொள்கிறான் என்று என் கல்லறையில் எழுதப்படும் எழுத்துக்களுக்காக நான் தவமிருக்கிறேன்...
- M. Karunanidhi

10. வாழும் போது மனிதர்களைப் பிரித்து வைக்கும் சாதிவெறி, அவர்கள் இறந்த பிறகாவது தணிந்துவிடுகிறதா?
- M. Karunanidhi

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content