மண்ணாசை கொண்டு | Quotes about Desire in Tamil - 03
23.தன் பகைவர்களை அடக்குபவனைவிட தன் ஆசைகளை அடக்குபவனே சிறந்த வீரன்!
-அரிஸ்டாடில்
24.ஆசையற்றவனே அகில உலகிலும் மிகப் பெரும் பணக்காரன்.
-சுவாமி விவேகானந்தர்
25.அறிவை முதலீடாக வைத்து அரண்மனை வாங்கலாம். ஆசையை முதலீடாக வைத்தால் துன்பத்தைத்தான் வாங்க முடியும்.
-சுவாமி விவேகானந்தர்
26.மண்ணாசை கொண்டு மண்ணை ஆண்ட மன்னவர் எல்லோரும் மடிந்து மண்ணாகி விடுவதை நீ அறிவாய். இருந்தும் நீ ஏன் மண்ணாசை கொண்டு அலைகிறாய்?
-வள்ளலார்
27.ஆசையே துன்பத்தின் அடிப்படை.
-கௌதம புத்தர்
28.ஆசை புத்தியை மறைக்கும் போது அறிவு வேலை செய்யாமல் போகிறது.
-கண்ணதாசன்
29.குறைந்த செலவுதனைக் கொண்ட ஆசைகளைக் கொண்டவனும் பணக்காரனே.
-ஹென்றி டேவிட் தொரேயு
30.உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.
-மசானபு புகோகா
31.அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கு தயாராய் இருக்க வேண்டும்.
-கண்ணதாசன்
32.ஆசையும், சுயநலமும் அற்றவனுக்குக் கடவுள் மற்றும் மோட்சம் தேவை இல்லை.
-தந்தை பெரியார்
33.அரிதான கொடிய ஆசையை அடக்கி வெல்பவனின் துயரங்கள் தாமரை இலை மீது விழுந்த தண்ணீர் துளிகள் ஒட்டாமல் விலகி ஓடுவதைப்போல் அவனை விட்டு அகலும்.
-கௌதம புத்தர்