நாளைக்கு செய்யலாம் | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 08
1. நாளைக்கு செய்யலாம் என்று தள்ளி போடாத ஒரே விஷயம்.. போனுக்கு சார்ஜ் போடுவதுதான்..
2. வேலைக்கு போனா எல்லாம் சரியாகிடும்.. கல்யாணம் பண்ணா எல்லாம் சரியாகிடும்.. குழந்தை பிறந்த எல்லாம் சரியாகிடும்.. இப்படி எல்லம் சொல்றவன மொதல்ல தூக்கிப்போட்டு மிதிச்சா எல்லாம் சரியாகிடும்..
3. மனக் கஷ்டம்னு சொன்னா ஆள் ஆளுக்கு ஆறுதல் சொல்ல வராங்க அதே பணக்கஷ்டம்னு சொன்னா எல்லாம் தெறிச்சு ஓடுறாங்க..
4. பணமும் ஞாயிற்றுக்கிழமையும் ஒன்றுதான்.. வருவது தெரியும்.. போறது தெரியாது..
5. இரண்டாயிரம் ரூபா கையில் இருந்தா எத வாங்கலாம்ன்னு தோனும்.. அதே நோட்டு கிழிஞ்சி இருந்தா இத எவன் வாங்குவான்னு தோனும்.. இதான் வாழ்க்கை..
6. வாழ்க்கைல விழுந்து எழுந்திருக்கிறத விட, காலைல ஆறு மணிக்கு தூக்கத்துல இருந்து எழுந்திருக்குறது தான் ரொம்ப கஷ்டம்..
7. வாழ்க்கைல முன்னேறனும்னா பொய் பேச கூடாது, திருட கூடாது, முக்கியமா நெட்கார்டு போட கூடாது..
8. புதிதாக வேலைக்கு விண்ணப்பிப்பவரை விட, வேலையில் இருப்பவர்கள் தான் மற்றொரு வேலைக்கு அதிகமாக விண்ணப்பிக்கின்றார்கள் போல..
9. அந்த காலத்தில பத்து பிள்ளைங்க பெத்தாங்க.. விவசாயத்தை நம்பி இந்த காலத்துல இரண்டே பிள்ளைகளோட நிறுதிக்குறாங்க.. விலைவாசிய நினைச்ச வெம்பி..
10. கேலண்டர் ராசிபலன்ல தோல்வி, பயம், சோகம், அலைச்சல்னு போட்டு இருந்த எல்லாம் சரியா நடக்குது ஆனா வெற்றி மகிழ்ச்சி பணவரவுனு போட்டு இருந்த எதுவுமே நடக்கமாட்டங்குது