அடக்கம் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Quotes about Modesty
1.அடக்கமுடையவன் மகிழ்ச்சியடைகிறான், அடக்கம் இல்லாதவன் துன்பமடைகிறான்.
-மகாவீரர்
2.அழிவுக்குக் காரணம் அகந்தை, மேன்மைக்கு வழிகோலுவது தாழ்மை.
-இயேசுநாதர்
3.ஒரு பகைவனால் ஏற்ப்டும் தீமையை விட அடக்கம் இல்லாத மனமே ஒருவனுக்கு அதிகமான தீமையைச் செய்கிறது.
-கௌதம புத்தர்
4.அகந்தையை வென்றுவிட்டால் அடக்கம் தானாகவே நம்மை வந்து சேரும்.
-மகாவீரர்
5.மற்றவர்களை அடக்கி ஆளுதல் வலிமை; உங்களை அடக்கி ஆளுதலே உண்மையான சக்தி.
-லாவோட்சு
6.அடக்கத்தின் மூலம் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியுடன் முன்னேறியவர்கள் உண்டு
-கண்ணதாசன்
7.அகந்தை உண்டானால் எல்லாம் உண்டாகும், அது அடங்கினால் எல்லாம் அடங்கும்
-ரமணர்
8.வேரிலிருந்து அடிமரமும், அடிமரத்திலிருந்து கிளைகளும் தோன்றுகின்றன. அதைப்போல அடக்கத்திலிருந்து அறமும், அறத்திலிருந்து அனேக நன்மைகளும் உண்டாகின்றன.
-மகாவீரர்
9.வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக் கொள்பவன், இரண்டாம் முறை வென்ற மனிதனாவான்.
-டிஸ்ரேலி
10.அடக்கம் நல்லதுதான். ஆனால், அது அடிமைத்தனமாக இருக்கக்கூடாது.
-ஜவகர்லால் நேரு
11.அலட்டிக் கொள்ளாமல் இருக்கும் போது அபாரமான செயல்பாட்டிற்குப் பலன் கிடைக்கும்! விஷயங்கள் எப்படி வருகின்றனவோ அதை அப்படியே எடுத்துக் கொள்ளவேண்டும்.
-அப்துல் கலாம்
12.மனிதன் அடக்கம் என்ற போர்வையில் தன்னைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.
-கி.வீரமணி
13.அடக்கத்தின் சிறப்பே, நாம் உயர உயரப் பணிவும், அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது.
-கி.வீரமணி
14.அடக்கமாக வாழ்பவன் இன்மையிலும், மறுமையிலும் இன்பம் பெறுகிறான்.
-மகாவீரர்