நம் மீது நம்பிக்கை | Motivational quotes in Tamil – 01
1. தனக்குத் தானே தன்னம்பிக்கையுடன் மீண்டு வரும் வரை, ஒருவரின் வேதனையை எவராலும் தீர்க்க முடியாது.
2. தனித்து நின்றாலும் துணிந்து நில். பலருக்கும் தாழ்ந்து போகும் போதுதான் இந்த உலகம் உன்னை காலில் போட்டு மிதிக்கத் துவங்கி விடுகிறது...!
3. சுவாசத்தை கவனி ஆயுள் கூடும். வார்த்தையை கவனி மதிப்பு கூடும். செய்யும் செயலை கவனி நிதானம் கூடும். எண்ணங்களை கவனி வாழ்வில் வெற்றிகள் கூடும்.
4. இந்த உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது உன் ஆழ் மனது தான்.. அது என்ன நினைக்கிறதோ, அதற்காக முயற்சி செய்ய வைத்து அதை நோக்கியே உன் வாழ்க்கை பயணத்தை அமைக்கிறது..
5. நம் மீது நம்பிக்கை நமக்கிருக்கும் வரை வாழ்க்கை நம் வசம்.
6. விடா முயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் எந்த துன்பத்தையும் கடந்து வாழ்வில் சாதிக்க முடியும்
7. துரோகிகள் மீது நம்பிக்கை வைத்ததற்காக வருத்தப்படாதே.. நீ வைத்த நம்பிக்கைதான் துரோகிகளை உனக்கு அடையாளம் காட்டுகிறது..
8. எல்லாம் இழந்த பின்னும், எவனிடம் நம்பிக்கை மிச்சம் இருக்கிறதோ, அவனே வெற்றிக்கு தகுதியானவன்.
9. முயற்சி இல்லாத நம்பிக்கை.. கப்பல் இல்லாத கடல் யாத்திரை போன்றது...!
10. உயர்ந்து நிற்கும் மரமெல்லாம் என்றோ ஓர் நாள் விதைகளாக மண்ணில் விழுந்தவையே..!