வெற்றி என்பது | Motivational quotes in Tamil – 02
1. வாழ்த்தைக் கேட்டு வானத்தைத் தலைநிமிர்ந்து பார்க்கவும் வேண்டாம். வசவைக் கேட்டு தரை பார்த்துத் தலைகுனியவும் வேண்டாம்.
2. வெற்றி வரும் வரை குதிரை வேகத்தில் ஓடு.. வெற்றி வந்த பின் குதிரையை விட வேகமாக ஓடு.. அப்போது தான் உன் வெற்றி உன்னிடம் நிலைத்து நிற்கும்..
3. தடைகளை கண்டு அஞ்சாமல் இருப்பதே விரைவான முன்னேற்றத்திற்க்கு வழி..
4. நடந்ததை நினைத்து அழுது கொண்டிருப்பது வாழ்க்கையில்லை.. அதை மறந்து நம்மை அழ வைத்தவர்களுக்கு முன்னால் சிரித்த முகத்தோடு வாழ்வதே மிக சிறந்த வாழ்க்கை..
5. தனது குறிக்கோளை அடையும் வரை விடா முயற்சியுடன் முயற்சித்துக் கொண்டே இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்..!
6. உங்கள் நோக்கம் நிலவாக இருக்கட்டும். ஒருவேளை அதில் தோற்றால், நீங்கள் ஒரு நட்சத்திரத்தை வெல்லக்கூடும்.
7. நம்முடைய மிகப்பெரிய பலவீனம் முயற்சியைக் கைவிடுவது... மிகப்பெரிய பலம் மீண்டும் ஒரு முறை முயற்சி செய்வது.
8. வெற்றி என்பது உன்னை உலகிற்கு அறிமுகம் செய்வது.. தோல்வி என்பது உன்னை உனக்கே அறிமுகம் செய்வது ..
9. கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே. உன் நம்பிக்கை உன்னை கைவிடாது...!
10. ஜெயித்தவனுக்கு தான் அடுத்து ஜெயிப்போமா என்கிற பயம் இருக்கும். ஆனால், தோற்றவனுக்கு அடுத்து கண்டிப்பாக ஜெயிப்போம் என்கிற நம்பிக்கை இருக்கும்..