முள் குத்தினாலே | Motivational quotes in Tamil – 04
1. பூக்களாக இருக்காதே உதிர்ந்து விடுவாய்.. செடிகளாக இரு அப்போதுதான் பூத்துக்கொண்டே இருப்பாய்!
2. ஏதாவது ஒன்றை சிறிது நேரம் கழித்துச் செய்ய வேண்டியது இருந்தால், அதை இப்போதே செய்ய முடியுமா என்று பார். நாளை செய்ய வேண்டியதை இன்றே செய்ய முடியுமா என்று பார். இப்படிச் செய்தால், அறுபது வருட வாழ்க்கையை, உன்னால் இருபது வருடங்களில் வாழ்ந்து விட முடியும்..!
3. வெற்றியை அடைய கடைசியாக ஓடுகிறேன் என்பதற்காக வருத்தமில்லை.. இன்னும் நின்றுவிடாமல் ஓடுகிறேன் என்பதே பெருமை..
4. புதைக்கப்படவில்லை.. விதைக்கப்படுகிறோம்... என்றுணர்ந்த விதை இருளுக்கு அஞ்சாது..! ஒதுக்கப்படவில்லை.. செதுக்கப்படுகிறோம்... என்றுணர்ந்த மனம் தோல்விக்கு அஞ்சாது..!!
5. முள் குத்தினாலே கத்தும் நாம், டாக்டர் ஊசி போடும்போது மட்டும் தாங்கிக்குவோம்.. வலி என்னவோ ஒன்றுதான்.. ஏற்றுகொள்ள துணிந்துவிட்டால் வலிகளும், வேதனைகளும் தூசிதான்...!
6. வாழ்க்கையில் நல்லது நடந்தால் பெருமைகொள். நடக்கவில்லையா, அதைவிட அதிகமாக பெருமை கொள். ஏனென்றால்.. நாளை அதை விட சிறப்பாக நடக்கும்..!
7. எதற்கெடுத்தாலும் காரணம் தேடிக்கொண்டிருந்தால், என்றைக்குமே தலைவனாக முடியாது.
8. அறிவு ஒன்றுதான் அச்சத்தை முறிக்கும் அரிய மருந்து. அறிவை வளர்த்துக் கொண்டால் எல்லாவிதமான பயங்களும் அகன்றுவிடும்...!
9. பிறர் கேலி செய்கிறார்கள் என பின் தங்கி விடாதே, முன்னேறிச் சென்று திரும்பிப் பார். அவர்கள் அதே இடத்தில் வேறொருவரை கேலி செய்து கொண்டு இருப்பார்கள்..!
10. சொன்ன ஒரு சொல்.. விடுபட்ட அம்பு.. கடந்துபோன வாழ்க்கை.. நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம்.. ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது..!