வார்த்தைகளால் சொல்லும் | Motivational quotes in Tamil – 08
1. எனக்கு ஒரு பிரச்சனை என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்.. பிரச்சனை என்று சொன்னாலே கவலையும் பயமும் கட்டாயம் வரும்.. எனக்கு ஒரு சவால் என்று சொல்லிப் பாருங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் தானாகவே வரும்..
2. நீ எந்த அளவுக்கு உயர்ந்தவனாக வேண்டுமென நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்து செல்ல உன்னைத் தயார் செய்து கொள்.
3. வாழ்க்கையில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தால் தோல்விகளை தாண்டி வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்
4. முடிவு தெரியாத நம் வாழ்க்கையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் நம் வாழ்க்கையை மாற்றிக்கொண்டே இருக்கும்..!
5. தோல்விக்கான காரணங்கள் இரண்டு: 1) யோசிக்காமல் செய்வது. 2) யோசித்த பின்பும் செய்யாமல் இருப்பது.
6. பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை.. பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை
7. நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது.. அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார்.
8. வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட.. வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..!
9. படித்தவனிடம் பக்குவம் பேசாதே. பசித்தவனிடம் தத்துவம் பேசாதே.. மகான் போல் நீ வாழ வேண்டும் என்றில்லை, மனசாட்சிப்படி வாழ்ந்தால் போதும்..!!
10. தேங்கிக் கிடக்கும் குட்டைதான் கல்லெறிந்தால் கலங்கும். ஓடும் நதி கலங்குவதில்லை. இயங்கிக் கொண்டே இரு. எந்தச் சோதனையும் உன்னை ஒன்றும் செய்ய முடியாது..!