அமைதியைவிட மேலான | அமைதி | Peace quotes in Tamil - 01
1.அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவுமில்லை.-கௌதம புத்தர்
2.அமைதி என்பது ஆழமான புரிதலினால் ஏற்படுவது, அதை ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
3.அமைதிக்காக உழைத்து, அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.
-இயேசுநாதர்
4.மன அமைதியில் அடங்கியதே இன்ப வாழ்வு.
-சிசரோ
5.அரசனாயினும் ஏழையாயினும், தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைச்சிறந்த மகிழ்ச்சி உடையவன்.
-கதே
6.மூளையின் ஆற்றலுக்கு இணையாக எதையும் மாற்றாகச் சொல்ல முடியாது. ஆனால் சில நேரங்களில் அமைதி காப்பதே, மெளனமாக இருப்பதே சிறந்த பலன்களைத் தரும்.
-தாமஸ் ஆல்வா எடிசன்
7.எங்கு சமாதானம் இல்லையோ அங்கே மறுபடியும் மறுபடியும் சமாதானத்தைப் பற்றியே பேசுங்கள்.
-இயேசுநாதர்
8.எவன் தன் வீட்டில் அமைதியைக் காண்கிறானோ அவன் அரசனாக இருந்தாலும் விவசாயியாக இருந்தாலும் மிகமிக மகிழ்ச்சியுடையவனாக இருப்பான்.
-கதே
9.முட்டாளுக்கு 'அமைதியாக இரு' என்று சொல்வதைவிட உயர்ந்த அறிவுரை வேறு எதுவும் இல்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
10.உங்கள் அமைதியை புரிந்துகொள்ளமுடியாத ஒருவரால், அனேகமாக உங்கள் வார்த்தைகளையும் புரிந்து கொள்ளமுடியாது.
-எல்பர்ட் ஹப்பர்ட்