எதையாவது ரொம்ப | Quotes about Desire in Tamil – 01
1.எதையாவது ரொம்ப ஆசைப்படும்போது அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
-கண்ணதாசன்
2.பகைவனை அடக்குபவனை விட , ஆசைகளை அடக்குபவனே வீரன்.
-அரிஸ்டாடில்
3.ஆசைகளை அடக்க வேண்டியதில்லை, அதைச் சீரமைப்பதுதான் முக்கியம்.
-சாக்ரட்டீஸ்
4.ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது, தீர்த்து வைக்கவும் முடியாது.
-சிசரோ
5.இந்த உலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக் கூடிய ஒரே செடி, ஆசைதான்.
-கண்ணதாசன்
6.ஆசையினால் தூண்டித் தள்ளப்பட்ட மனிதர்கள் வேட்டையில் விரட்டப்பட்ட முயல்களைப் போல அங்குமிங்கும் ஓடித் திரிகிறார்கள்.
-கௌதம புத்தர்
7.இலட்சியத்தின் மறுவடிவம்தான் ஆசை, அது நல்ல விதமாக அமைந்துவிட்டால் மகிழ்ச்சியாக வாழ முடியும்.
-டேல் கார்னகி
8.தேவைகள் குறையும் அளவிற்கே தெய்வத்தன்மையை அடைவோம்.
-சாக்ரட்டீஸ்
9.ஒருவனுடைய ஆசைக்கும் திறமைக்கும் இடைவெளி அதிகம் இருந்தால் அவன் வாழத்தெரியாதவன். இரண்டும் ஒன்றியிருந்தால் அவன் வாழ்கிற மனிதன்.
-கதே
10.ஒருவனுடைய ஆசைகள் வளர வளர அவனுடைய தேவைகளும் வளர்ந்துகொண்டே போகும்.
-பிளேட்டோ
11.எந்தப் பொருளின்மீது ஆசையில்லையோ அவற்றால் துன்பமில்லை
-ஔவையார்