அரசியல் பற்றிய தமிழ் சிந்தனை வரிகள் | Tamil Thought Line on Politics
1.எத்தனை வள்ளல்கள் வாழ்ந்தும் வறுமையை ஒழிக்க முடியவில்லை ஒரு நல்ல அரசாங்கம் ஏற்பட்டால் வள்ளல்கள் தேவை இல்லை.
-மு. வரதராசன்
2.பொருளாதார வேற்றுமை உள்ளவரை எந்த அரசாயினும் சரி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் பொய்ப்பேச்சே.
-சிங்காரவேலர்
3.பசியினால் திரிகிற ஏழைகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பி வைக்கிறார்கள். அரசிடமிருந்து கோடிக்கணக்காகத் திருடுபவர்கள் ஒரு நாள்கூட சிறைத் தண்டனை அனுபவித்ததில்லை.
-பிடல் காஸ்ட்ரோ
4.உலகளாவிய அரசியலிலும் சமூகப் போராட்டத்திலும் தணியாத இலட்சியத்தாகம் இளைஞர்களுக்குள் சுடர் விட்டு எரிய வேண்டும்.
-சே குவேரா
5.ஒழுங்காகச் சம்பாதித்துப் பணக்காரனானவனும் குறைவு. உண்மையைப் பேசி பதவிக்கு வந்தவனும் குறைவு.
-கண்ணதாசன்
6.மெய்யறிவாளர்கள் அரசியல் நிர்வாகத்தை அடைய வேண்டும் அல்லது அரசியல்வாதிகள் ஏதாவதொரு அற்புதத்தினால் மெய்யறிவாளர்களாக மாறவேண்டும். அதுவரை மனித ஜாதியானது தீமைகளில் இருந்து விடுதலை காணாது.
-பிளேட்டோ
7.நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாய்ப் பழகிய தொளிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை பசப்பில் பேசி ஓட்டைப் பறிக்கும் வாயாடியிடமே கொடுக்கிறோம்.
-பிளேட்டோ
8.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
-அறிஞர் அண்ணா
9.அரசியல்வாதி கடவுளையும் ஏமாற்றக் கூடியவன்.
-ஷேக்ஸ்பியர்
10.நம்மவர்கள் சிரிப்பதற்கு மூலகாரணமே அரசாங்கம் தான். அரசாங்கம் மட்டும் இல்லையென்றால் நம் நாட்டில் சிரிப்பதற்கு ஒன்றுமே இல்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
11.அரசியல்வாதிகள் பொறுக்கித் தின்ன அரசியல்.
-தந்தை பெரியார்
12.யாரிடம் தத்துவ ஞானமும், தலைமைப் பண்பும், அறிவுத்திறனும் இருக்கிறதோ அவரிடம் ஆளும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் அல்லது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவருக்கு மேற்கொண்ட தகுதிகள் இருக்க வேண்டும்.
-பிளேட்டோ
12.ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.
-கார்ல் மார்க்ஸ்