ஜாதி , மதம் | நகைச்சுவை | Comedy quotes in Tamil – 02
1. சந்தோஷத்த இட்லி மாதிரி சின்னதா கொடுத்துட்டு.. சோகத்த பேமிலி தோசை மாதிரி பெருசா கொடுப்பவர் தான் கடவுள்..
2. கஷ்ட பட்டாவது முன்னுக்கு வரலாம்னு நினைக்கும்போது தான் ஏதாவது ஒரு கஷ்டம் முன்னுக்கு வருது..!
3. காசை கரி ஆக்கினால் அது தீபாவளி.. காசை கறி ஆக்கினால் அது ரம்ஜான்..
4. நவரசமான ரசனையுடைய பொண்ணு வேண்டும்னு தேடி அலையுறவனுக்கு.. புளி ரசம் கூட வைக்க தெரியாத பொண்டாட்டி தான் அமையும்.. ஏன்னா.. விதி அப்படி..
5. ஜாதி, மதம், இனம், மொழி இதையெல்லாம் தாண்டி வருவது காதல் மட்டுமல்ல.. காய்ச்சலும் தான்..
6. அதிக கோபம் வரும்போது பச்சை மிளகாயை கண்ணில் வைத்து கொண்டால்.. கோபத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்..
7. இன்றைய சூழ்நிலையில் தீபாவளிக்கு ஆகும் செலவை பார்த்தால், அன்றைக்கு நரகாசூரனை கொல்லாம மன்னிச்சிவிட்டு இருக்கலாம் போல்..
8. வாழ்க்கை-ல எவ்வளவு கிடைச்சாலும் இன்னும் Bestஆ ஏதிர்பாக்றது தான் நாம நாசமா போறதுக்குக் காரணம்..
9. கல்யாணம் ஆன ஒரு ஆண் நிம்மதியா இருக்கான்னா.. ஒன்னு அவனுக்கு கெடச்ச மனைவி வரமா இருக்கனும்.. இல்ல ஊருக்கு போன மனைவி வராம இருக்கனும்.. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி.. மனதின் எண்ணங்கள் statusல் தெரியும் என்பது whatsapp மொழி..