வாய்ப்புக்காக காத்திருக்காதே | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -26
1. எவன் ஒருவன் தவறு செய்ததில்லையோ, அவன் புதியதாய் எதையும் கற்றுகொண்டதில்லை.
- Albert Einstein
2. வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீங்களாக இருங்கள்.
- Mother Teresa
3. உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால் உன் சிரிப்பு ஒருவரைக்கூட வேதனைப்படுத்தக்கூடாது.
- Charlie Chaplin
4. நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை...
- Swami Vivekananda
5. ஒருவரின் காலடியில் வாழ்வதை விட... எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல். சே குவேரா
- Che Guevara
6. ஏமாற்றுவதை காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது
- Abraham Lincoln
7. வாய்ப்புக்காக காத்திருக்காதே. உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.
- A. P. J. Abdul Kalam
8. தன்னம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் மண்டியிட்டது இல்லை.
- A. P. J. Abdul Kalam
9. என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன!
- Charlie Chaplin
10. உன்னை ஜெயிக்க யாரும் பிறக்கவில்லை என்று நினைக்காதே. எல்லாரையும் ஜெயிக்க நீ பிறந்திருக்கிறாய் என நினைத்துகொள், வெற்றி உன் பக்கம்.
- Napoleon Bonaparte
11. வெற்றி பெற மூன்று வழிகள். ஒன்று.. மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு.. மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள். மூன்று.. மற்றவர்களை விட குறைவாக எதிர்பாருங்கள்.
- William Shakespeare