என்னால் முடியாது | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -17
1. என்னால் முடியாது என்று கூறியவர்களுக்கு நன்றி. அவர்களால் தான் நான் இன்று சாதித்திருக்கிறேன்!
- Albert Einstein
2. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய். உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
- Swami Vivekananda
3. எனக்கு ஒரு மரத்தை வெட்ட எட்டு மணி நேரம் இருந்தால் அதில் ஆறு மணி நேரம் கோடரியை கூர்மை படுத்துவேன்.
- Abraham Lincoln
4. நிறைய ஓட்டப்பந்தைய வீரர்கள் என்னை விட நன்றாக தொடங்குவார்கள். ஆனால் முடிப்பதில் நான் தான் சிறந்தவன்.!
5. எந்த எளிய மனிதர்களிடமிருந்து இந்த அதிகாரங்கள் நமக்கு கிடைத்ததோ, அந்த எளிய மனிதர்களுக்கே இந்த அதிகாரத்தின் பலனை செலுத்துங்கள். நமது நாட்டை பிடித்திருக்கும் லஞ்சத்திலிருந்து இந்த மக்களை மீட்டெடுப்போம் என உறுதி ஏற்றுக்கொள்ளுங்கள்.
6. இருப்பதிலேயே கடினமான வேலை யோசனை செய்வதே ஆகும். அதனால்தான், மிகச் சிலரே அதை செய்கிறார்கள்.
- Henry Ford
7. எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறாவதில்லை. வரலாறு ஆனவர்கள் யாரும் தனக்காக வாழ்ந்ததில்லை..
- K. Kamaraj
8. இந்தியாவை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது, இது பல இன குழுக்களின் தேசம். அப்படி சொந்தம் கொண்டாட வேண்டிய நிலை வந்தால் இந்தியாவின் பூர்வகுடியான தமிழர்கள் மட்டுமே கொண்டாடமுடியும்.
- B. R. Ambedkar
9. தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால் அது தான் உண்மையான தோல்வி.
- A. R. Rahman
10. ஊக்குவிக்க ஆள் இருந்தால், ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பான்..
- Vaali