என் பிரச்சனைகளை | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -21
1. "தான் துன்பத்தில் கிடந்தாலும், மற்றவருக்கு துன்பம் நினைக்காமல் வாழ்பவனே உயர்ந்த மனிதன்". -புத்தர்
- Buddha
2. என் பிரச்சனைகளை என் உதடுகள் அறிவதே இல்லை. அவை என்றும் சிரித்துக்கொண்டே இருக்கின்றன!
- Charlie Chaplin
3. 'இங்கும் அங்குமாக நுனிப்புல் மேயாதீர்கள். லட்சியம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் முழுமூச்சாக ஈடுபடுங்கள்'
- Swami Vivekananda
4. செய்ய முடியும் என்று நம்பு. ஒன்றைச் செய்ய முடியும் என்று நீ முழுதாய் நம்பும்போது, உன் மனம் அதைச் செய்து முடிக்கும் வழிகளைக் கண்டறியும். ஒரு காரியத்தில் வைக்கும் நம்பிக்கை, அந்தக் காரியத்தை முடிக்கும் வழியையும் காட்டுகிறது.
- David Joseph Schwartz
5. சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன....
- A. P. J. Abdul Kalam
6. பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது.! -ஆபிரகாம் லிங்கன்
- Abraham Lincoln
7. உன்னை அறிந்தால் - நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்! உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம்!! - கவிஞர் கண்ணதாசன்.
- Kannadasan
8. ‘பருவத்திற்கு தகுந்தாற்போல் மரங்கள் கனிகளைத் தருகின்றன.. மற்ற காலங்களில் அவைகள் பழங்களை தருவதில்லை.. அதுபோல, நம் முயற்சிகளும் அதற்கான பருவத்தில் பலன் கொடுக்கும்...!‘ –ஔவையார்
9. மகத்தான செயல்கள் கடின உழைப்பு இல்லாமல் தாமாக ஒருபோதும் நடப்பதில்லை.
- Swami Vivekananda
10. தீமையை நன்மையால் வெல்லுங்கள், பொய்யினை உண்மையால் வெல்லுங்கள்.
- Buddha