கொடையாளி | கடவுள் | God Quotes in Tamil-02
1. நீ எதிர்பார்த்த வாசல்களை மனிதர்கள் அடைக்கும் போது, உனக்கு எதிர்பாராத வாசல்களை கர்த்தர் திறந்து கொடுப்பார்.
2. ‘பசியால் வாடுவோருக்கும், எளியோருக்கும் வயிறார உணவு அளிப்பவனே கொடையாளி.‘
3. உன் கவலைகளை ஆண்டவனிடம் மட்டுமே சொல்லி அழு. ஏனெனில்.. அவர் மட்டும்தான் அதை யாரிடமும் சொல்லி சந்தோசப்படமாட்டார்.
4. பழி தீர்ப்பதைவிட பொறுமையே நல்லது அல்குரான் 16:126,127
5. எல்லாவற்றையும் இழந்துவிட்டோம் என்று நினைக்கும் போது ஒன்றை மறக்காதீர்கள் எதிர்காலம் என்ற ஒன்று உள்ளதை..
6. உன்னைக் காக்கும்படிக்கு நான் உன்னுடனே இருக்கிறேன் எரே 1:8
7. அஞ்சுவதும், அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே...
8. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றை தகர்த்தெறிய உதவுவது தன்னம்பிக்கை எனும் தன்னிகரற்ற சக்தி மட்டும் தான்...
9. கர்த்தர் உன் வலதுபக்கத்தில் உனக்கு நிழலாயிருக்கிறார் சங்கீதம் 121:5
10. உன்னிடம் இல்லாததை நீ கடவுளிடம் கேட்கிறாய். உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடு. நீயும் கடவுளாக பார்க்கப்படுவாய்..!
11. சுலபமாய் சேர்த்த செல்வம் குறைந்து போகும். உழைப்பின் மூலம் சிறுகச் சிறுக சேகரிப்பவனோ செல்வதைப் பெருக்குவான்.
12. இறைவா.. எனக்கு ஏன் இந்த சோதனை என்று புலம்பாதே. மரத்துக்கு கூட கோடையை வைத்தவன் வசந்தத்தையும் வைத்திருக்கும் போது.. உன்னை மட்டும் நிரந்தர துன்பத்தில் விட்டுவிடுவானா...?
13. கடுமையான கஞ்சத்தனம், தகுதியற்ற தற்பெருமை, எல்லையற்ற பேராசை, ஆகிய மூன்றும் மனிதனை வீணாக்கிவிடும்.
14. மனிதனின் குற்றங்களில் பெரும்பாலானவை அவனது நாவிலிருந்துதான் பிறக்கின்றன..! -நபிகள் நாயகம்
15. பிறர் குற்றங்களை மன்னிக்கும் குணம், குற்றம் இல்லாதவர்களிடத்தில் தான் காணப்படும்..