அரசியலை நாம் | மேதைகளின் வரிகள் |Geniuses Motivational Quotes in Tamil -22
1. இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே!
- Abraham Lincoln
2. ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘.
- Plato
3. எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் பு திய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
- Albert Einstein
4. தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால் எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்; ஆனால் எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே ஜெயிப்பான்!
- Swami Vivekananda
5. மன உறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காக்கும்..!
6. வெள்ளைக்காரன் மணலில் கடிகாரம் கண்டுபிடித்து பயன்படுத்தினான்.. தமிழன் சூரியனை வைத்தே நேரத்தை கணித்து சொன்னான். அவன் மண்ணைப் பார்த்து சிந்தித்தபோதே விண்ணை பார்த்து சிந்தித்தவன் தமிழன்..!!
7. கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே, அது உன்னை கொன்றுவிடும். கண்ணை திறந்து பார்.. நீ அதை வென்று விடலாம்...!
- A. P. J. Abdul Kalam
8. முயற்சியை எவனொருவன் கைவிடுகிறானோ, அப்போதே அவன் திறமை அவனிடமிருந்து போய் விடுகிறது
9. காயத்தால் அழிந்தவர்களை விட, கோபத்தால் அழிந்தவர்களே அதிகம்... கோபம் என்பது வீரத்தின் அடையாளம் அல்ல.. விவேகத்தின் பலவீனம்
10. யாரோ கேட்டார்கள், ‘நீங்கள் பெரிய மகான்‘. ’தரையில் ஏன் அமர்ந்துள்ளீர்கள்?’ புத்தர் சொன்னார், ‘தரையில் அமர்பவன் ஒருபோதும் தவறி விழமாட்டான்‘ என்று..!