தலை குனிந்து | கடவுள் | God Quotes in Tamil-03
1. தலை குனிந்து என்னைப் பார்.. தலை நிமிர்ந்து உன்னை நடக்க வைக்கிறேன்..
2. நான் எல்லா உயிர்களிடத்தும் சமமாய் இருக்கிறேன்.. எனக்கு பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் யார் என்னை பக்தியோடு பூஜிக்கிறார்களோ அவர்கள் என்னிடத்தும், நான் அவர்களிடத்தும் உள்ளேன்..
3. இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது. அதற்கு முழுமையாய் மன்னிப்பவர் என்று அர்த்தம்.
4. நாம் நாமாக இருக்கும் போது எந்த பிரச்சனையும் கிடையாது ஆனால், தன்னிலை மாறும் போது அதனால் ஏற்படும் விளைவுகள் அதிகம் அது நன்மையோ தீமையோ....! இவ்விரண்டும் அதிலடங்கும் முடிவு உங்கள் கையில்..
5. வறுமை இல்லாமல் வாழவேண்டும் என்று கடவுளை வேண்டுவதைவிட, வறுமையைக் கொடுத்தாலும் அதனை தாங்கும் சக்தியையும், சமாளிக்கக் கூடிய திறனையும் கொடு என்று வேண்டுவதே சிறந்தது...!
6. கர்த்தர்தாமே உனக்கு முன்பாகப் போகிறவர், அவர் உன்னோடே இருப்பார், அவர் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை, நீ பயப்படவும் கலங்கவும் வேண்டும். -உபாகமம்(31:8)
7. நான் கர்த்தரைத் தேடினேன், அவர் எனக்கு செவிகொடுத்து, என்னுடைய எல்லாப் பயத்துக்கும் என்னை நீங்கலாக்கிவிட்டார். சங்கீதம் 34:4
8. தீமையை விட்டு விலகி, நன்மைசெய்; சமாதானத்தைத் தேடி, அதைத் தொடர்ந்துகொள். சங்கீதம் 34:14
9. குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். குர்ஆன் 104:1
10. ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. யோவான் 15:13
11. விரோதிகளை வெறுக்காதீர்கள், ஒரு நாள் அவர்களும் தோழராக கூடும். மனிதர்களை நேசிக்க கற்றுகொள்ளுங்கள்.. இறைவனின் நேசம் தானாகவே கிடைக்கும்..! – திருக்குர்ஆன்
12. கணபதி என்றிட கலங்கும் வல்வினை. கணபதி என்றிட காலனும் கைதொழும். கணபதி என்றிட கருமம் ஆதலால். கணபதி என்றிட கவலை தீருமே..!
13. தேவனுடைய வார்த்தையை வெறுமனே படிப்பதை விட அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று விசுவாசியுங்கள்.
14. ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால் முதலில் தாய்க்கு செய் ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்
15. கடவுளை பார்த்ததில்லை என்று சொல்லாதீர்கள் உங்கள் கஷ்டத்தில் உதவும் கருணை உள்ளம் கொண்ட அனைவரும் கடவுளே...!!!