நாம் அனைவருமே | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 01
1.நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்.
-அப்துல் கலாம்
2.ஒவ்வொரு நாளும் ஆண்டின் மிகச்சிறந்த நாள் என்று உன் இதயத்தின் மீது அழுத்தமாக எழுதிக்கொள்.
ஒவ்வொரு நாளையும் உன்னால் மாற்றிக் காட்ட முடியும் மனதில் உறுதியிருந்தால்
-எமேர்சன்
3.உங்களால் பறக்கமுடியாவிட்டால் ஓடுங்கள்.
ஓட முடியாவிட்டால் நடந்து செல்லுங்கள். நடக்கவும் முடியாவிட்டால் தவழுங்கள்.
இலக்குகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதே முக்கியமானது
-அடால்ஃப் ஹிட்லர்
4.சிக்கலான பிரச்சனை வரும்போது சிங்கம்போல சிலிர்த்து எழுங்கள்! நரிகள் வளைகளைத் தேடுவது போல் ஓடாதீர்கள்!
-கி.வீரமணி
5.நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள்.
-ஆஸ்கார் வைல்ட்
6.காலத்தின் மணல் பரப்பில் உன் கால்சுவடுகளைப் பதிக்க விரும்பினால் உன் கால்களை இழுத்து இழுத்து நடக்காதே!
-அப்துல் கலாம்
7.பிறக்கும் போது உன்னோடு இல்லாத பெயர்,நீ இறக்கும் பொழுது உன்னோடு தான் இருக்கும்,அதை உன் சாவிற்க்கு கொடுக்காமல் சரித்திரத்திற்க்கு கொடு.
-அடால்ஃப் ஹிட்லர்
8.நடத்தப்படும் படகு கரை வந்து சேர்கிறது.
சிதறி விழுந்த கட்டையும் காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது.
முடியுமானால் படகாவோம்;
இல்லையென்றால் கட்டையாவோம்;
என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம்.
-கண்ணதாசன்
9.உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
-கதே
10.இறைவன் நமக்கு செல்வத்தை கொடுக்க வில்லையே என்று கவலைப்படாதே. நமக்கு உயிர் எனும் பெரிய செல்வத்தை கொடுத்திருக்கிறான். அதனைக் கொண்டு எதையும் சாதிக்கலாம்.
-நேதாஜி