நான் மெதுவாக நடப்பவன் | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 02
11.நீங்கள் அனைவரும் பெரிய காரியங்களைச் செய்யப் பிறந்தவர்களே என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். குட்டி நாய்களின் குரைத்தலைக் கண்டு நடுங்காதீர்கள். வானத்தே முழங்கும் இடிக்கும் அஞ்ச வேண்டாம். நிமிர்ந்து நின்று வேலை செய்யுங்கள்.
-சுவாமி விவேகானந்தர்
12.நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.
-ஆபிரகாம் லிங்கன்
13.நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
-மார்டின் லூதர் கிங்
14.உலக வரலாற்றைப் படிப்பதைவிட உலகில் வரலாறு படைப்பதே இனிமை.
-ஜவகர்லால் நேரு
15.ஒருவனின் காலடியில் வாழ்வதைவிட, எழுந்து நின்று உயிரை விடுவது எவ்வளவோ மேல்
-சே குவேரா
16.நீங்கள் எப்படியும் யோசித்தேயாக வேண்டும், அதை ஏன் பெரிதாக யோசிக்கக்கூடாது?
-டோனால்ட் டிரம்ப்
17.பதிலை கண்டறிவதை நோக்கி, முன்னோக்கி நகர்வதில் உங்கள் ஆற்றலை செலவிடுங்கள்.
-டெனிஸ் வைட்லி
18.ஊக்கமுடைய மனிதன் தன் கடமையைச் செய்து கொண்டே இருப்பான்.
-எமேர்சன்
19.தடம் பார்த்து நடப்பவன் மனிதன்.தடம் பதித்து நடப்பவனே மாமனிதன்.
-பிடல் காஸ்ட்ரோ
20.விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல
-அரிஸ்டாடில்