ஒவ்வொரு பிரச்சினைக்கு | ஊக்குவிப்பு | Motivating force quotes in Tamil - 05
41.ஆயிரம் வருடம் மௌனமாக நின்ற மரம் விழும்போது காடே அதிரும்படி செய்துவிடுகிறது. நீ...?
-ஜான் ரஸ்கின்
42.நீங்கள் எந்த வார்த்தையை அடிக்கடி சொல்கிறீர்களோ அந்த வார்த்தை ஒருநாள் உங்கள் வாழ்வில் உண்மையாகப் பலித்துவிடும். எனவே நம்பிக்கையுடன் வெற்றி வெற்றி என்று சொல்லுங்கள்.
-நெப்போலியன் ஹில்
43.போர் முனைக்குச் செல்லும் வீரர்போல் புரட்சிக்குத் தயாராக இருங்கள்.
-தந்தை பெரியார்
44.தன்னிடத்தில் மறைந்து கிடக்கும் சக்தியை மனிதன் உணர்ந்துகொண்டு காரியத்தில் ஈடுபடும்போது அவனால் சாதிக்கக்கூடாத காரியம் உலகத்தில் எதுவும் இருக்கமுடியாது.
-கதே
45.ஒவ்வொரு பிரச்சினைக்கு உள்ளேயும் ஒரு வாய்ப்பு உள்ளது.
-ராபர்ட் கியோசாகி
46.ஆயிரம் மைல்களுக்கான பயணம் ஒரு அடியிலேயே தொடங்குகின்றது.
-லாவோட்சு
47.முடியாது என்ற சொல்லே என் அகராதியில் கிடையாது.
-நெப்போலியன் ஹில்
48.எவ்வளவு மெதுவாக செல்கிறீர்கள் என்பது ஒரு விஷயமே அல்ல, எவ்வளவு தூரம் நிற்காமல் செல்கிறீர்கள் என்பதே முக்கியம்.
-கன்பூசியஸ்
49.இந்த உலகில் நீங்கள் வந்துள்ளதால் உங்கள் முத்திரை ஒன்றை விட்டுச் செல்லுங்கள்.
-சுவாமி விவேகானந்தர்
50.குறைகளை கண்டு தேங்காதே. தீர்வை தேடி ஓடு.
-ஹென்றி ஃபோர்டு