உழைப்பதற்கு | உழைப்பு | work quotes in Tamil - 01
1.கடினமான உழைப்பிற்கு ஆதாயம் என்ற தூண்டுதல் தேவைப்படுகின்றது. ஆதாயம் இல்லையென்றால் அது எப்பேர்ப்பட்ட உழைப்பாயினும் வீண்தான்.
-அரிஸ்டாடில்
2.உழைப்பதற்கு அஞ்சாதவர்களே எதிர்காலத்தில் சக்திமிக்க மனிதர்களாகத் திகழ்வர்.
-தாமஸ் புல்லர்
3.உணர்ச்சிக்கு முதலிடம் கொடுக்காமல் உழைப்புக்கு முதலிடம் கொடுத்தால், வாழ்க்கை உன்னதமாக இருக்கும்.
-தாமஸ் ஆல்வா எடிசன்
4.நீண்ட நாள் முழுவதும் கணத்திற்கு கணம், நேர்மையாய் துணிவாய், உன்மையாய், உழைக்கிறவன் கரங்களே அழகிய கரங்கள்.
-அப்துல் கலாம்
5.உங்களுக்கு சிறப்பான ஆற்றல் இருந்தால் உழைப்பு அந்த ஆற்றலை மேலும் வளர்த்துப் பெருகச் செய்யும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
6.நடந்து முடிந்தவைகளை நினைத்து வருந்திக் கொண்டே இருப்பதைவிட்டு விட்டு ஒரு மணி நேர உழைப்பால், உங்கள் துயரத்தைப் போக்கி மகிழ்வாக வாழலாம்.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
7.துருப்பிடிதுத் தேய்வதைவிட உழைத்துத் தேய்வது மேலானது.
-சுவாமி விவேகானந்தர்
8.உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
-கார்ல் மார்க்ஸ்
9.பாடுபடாமல் பயன்கள் கிட்டாது.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
10.உழைப்பின் முக்கிய பலன் இலாபமன்று; இலாபம் ஒரு உப பலமே. உழைப்பின் முக்கிய பலன் மனக் களிப்பே.