உழைப்பு என்றும் வீண்போகாது | உழைப்பு | work quotes in Tamil - 02
11.உழைப்பு என்றும் வீண்போகாது. உழைப்பிற்குத் தகுந்த பலன் ஒருநாள் கட்டாயம் கிடைக்கும்.
-நெப்போலியன் ஹில்
12.உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
13.வாழ்வதில்தான் இன்பம் உழைப்பதில்தான் வாழ்வு.
-லியோ டால்ஸ்டாய்
14.உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப் பார்க்குமே தவிர உள்ளே நுழைந்துவிடத் துணியாது.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
15.தொழிலாளர்களின் திறமையான உழைப்பிலேயே தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி இருக்கிறது.
-கார்ல் மார்க்ஸ்
16.உங்கள் நெற்றியில் இருந்து விழக்கூடிய வியர்வைத் துளிகள் உங்கள் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் வலிமை பெற்றவை.
-கலீல் ஜிப்ரான்
17.உழைப்பு சுறுசுறுப்பானது. அது வசதிகளையும் நன்மதிப்பையும் பெற்றுத் தருகிறது.
-பெஞ்சமின் பிராங்க்ளின்
18.தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான் சமூகத்தில் முன்னேற முடியும்!
-ஆபிரகாம் லிங்கன்
19.வெற்றி என்பது என்ன? ஒரு சதவிகிதம் சிந்தனையும், தொண்ணூற்றோன்பது சதவிகித உழைப்பும் சேர்ந்ததுதான்.
-தாமஸ் ஆல்வா எடிசன்
20.உழைத்துக் கொண்டே இருங்கள். அப்படி இருந்தால் உங்களுக்கு வாழ்வில் சலிப்பே வராது.