ஆபிரகாம் லிங்கன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Abraham Lincoln Motivational Quotes in Tamil
1.ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது
-ஆபிரகாம் லிங்கன்
2.நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை
வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
3.புத்தகம் என்பது, உற்ற
துணைவன், ஒப்பற்ற ஆசான்,
உயர்ந்த வழிகாட்டி, உயிரினும் மேலான உறவு.
-ஆபிரகாம் லிங்கன்
4.நான் மெதுவாக நடப்பவன், ஆனால் ஒருபோதும் பின்னோக்கி நடப்பதில்லை.
-ஆபிரகாம் லிங்கன்
5.ஒரு பலசாலியின் பலத்தைக் குறைப்பதால், ஒரு பலவீனன் பலசாலியாகிவிட முடியாது.
-ஆபிரகாம் லிங்கன்
6.சரியான இடத்தில் உங்கள்
கால்களை வைத்துள்ளீர்களா என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் பிறகு
உறுதியாக நில்லுங்கள்.
-ஆபிரகாம் லிங்கன்
7.ஒரு மரத்தை வெட்ட
எனக்கு ஆறு மணிநேரம் கொடுங்கள், அதில் முதல்
நான்கு மணி நேரத்தை கோடாரியினைக் கூர்மைப்படுத்தவே செலவிடுவேன்.
-ஆபிரகாம் லிங்கன்
8.கடவுள் நம் பக்கம்
இருக்கிறாரா என்பதில் நான்
அக்கறை கொள்ளவில்லை. என்னுடைய அக்கறையில் பெரும்பகுதி கடவுளின் பக்கமே உள்ளது. கடவுள்
எப்பொழுதுமே சரியானவர்
-ஆபிரகாம் லிங்கன்
9.கீழ்நோக்கிப் பார்க்கும் ஒருவன்
நாத்திகம் பேசலாம். மேல்நோக்கிப் பார்க்கும் எவனும் கடவுள்
இல்லை என்று சொல்லவே மாட்டான்.
-ஆபிரகாம் லிங்கன்
10.உங்களுடைய எதிரிகளை தன்னுடைய எதிரிகளாக நினைப்பவனே உங்கள்
நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்
11.திறமையின் மூலம் புகழ்
பெறலாம். ஆனால் ஒழுக்கத்தின் மூலமே ஒரு மனிதன்
சிறந்த மனிதனாக முடியும்.
-ஆபிரகாம் லிங்கன்
12.சேமிப்பை அலட்சியப்படுதுகிறவன் தன் வாழ்வில் ஒரு நாளும் வளமையைக் கொண்டு வர முடியாது.
-ஆபிரகாம் லிங்கன்
13.தனக்கு கிடைக்கும் ஊதியத்தின் மதிப்பை விட தன்னுடைய உழைப்பின் மதிப்பை உயர்த்திக் காட்டும் மனிதன் தான்
சமூகத்தில் முன்னேற முடியும்!
-ஆபிரகாம் லிங்கன்
14.நீங்கள் எல்லோரையும் கொஞ்ச
நாள் ஏமாற்றலாம். கொஞ்சம் பேரை எப்போதும் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும்,எப்போதும் ஏமாற்ற முடியாது.
-ஆபிரகாம் லிங்கன்
15.நாம் ஒருவருக்கொருவர் ஒரு ரூபாய்
கொடுத்தால், நம் இருவரிடமும் ஒரு ரூபாய் தான்
இருக்கும். நாம் ஒருவருக்கொருவர் ஒரு
நல்ல எண்ணத்தை பகிர்ந்தால், நம் இருவரிடமும் இரு
நல்ல எண்ணங்கள் இருக்கும்
-ஆபிரகாம் லிங்கன்
16.கண்ணெதிரே காணும் ஒவ்வொருவரையும் நம்புவது அபாயகரமானது. அதைக் காட்டிலும் ஒருவரையும் நம்பாதிருப்பது மிகவும் அபாயகரமானது.
-ஆபிரகாம் லிங்கன்
17.எனக்கு வேலை செய்யக் கற்பித்தார்கள், ஆனால் நான்
செய்யும் வேலையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கவில்லை.
-ஆபிரகாம் லிங்கன்
18.நீங்கள் ஒருவரின் குணத்தை சோதித்துப் பார்க்க வேண்டுமானால் அவரிடம் அதிகாரத்தைக் கொடுத்துப் பாருங்கள்.
-ஆபிரகாம் லிங்கன்
19.ஒரே குறிக்கோளுடன் உழைப்பவனுக்கு தோல்வியே கிடையாது
-ஆபிரகாம் லிங்கன்
20.இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல, அதில்
வாழ்ந்த வாழ்க்கை மட்டுமே!
-ஆபிரகாம் லிங்கன்
21.என்னுடைய பாட்டனார் யார்
என்பதை நான் அறியேன். ஆனால் நான் கவலைப்படுவதெல்லாம் அவருடைய பேரன் எத்தகையவனாக இருக்கவேண்டும் என்பது
பற்றியே.
-ஆபிரகாம் லிங்கன்
22.நான் அடிமையாக இருக்க
மாட்டேன். ஆகவே, நான்
எஜமானாகவும் இருக்க மாட்டேன். இதுதான் ஜனநாயகக் கோட்பாட்டின் அடிப்படைத் தத்துவம்.
-ஆபிரகாம் லிங்கன்
23.முன்னேற வேண்டும் என்று
விரும்பினால் யாருடனும் சண்டை
போடாதீர்கள். அதில் நேரம்
வீணாகிறது. நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழிவிடுவதே மேல்.
-ஆபிரகாம் லிங்கன்
24.மனத்தை ஒருவர் வைத்திருக்கும் நிலையைப் பொறுத்தே அவர் அடையும் மகிழ்ச்சி இருக்கிறது.
-ஆபிரகாம் லிங்கன்
25.எதிர்காலம் பற்றிய ஒரு
சிறந்த விஷயம் என்னவென்றால், அது ஒரு நாள்
வந்தே தீரும் என்பதே.
-ஆபிரகாம் லிங்கன்
ஆபிரகாம் லிங்கன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Abraham Lincoln Motivational Quotes in Tamil