அறிஞர் அண்ணா உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Arignar Anna Motivational Quotes in Tamil
1.போட்டியும், பொறாமையும், பொய்ச்
சிரிப்பும் நிறைந்த இவ்வுலகில் நமது பாதையில் நாம்
நேராக நடந்து செல்ல
நமக்குத் துணையாக இருக்கக் கூடியது கல்வி மட்டுமே.
-அறிஞர் அண்ணா
2.பழமை புதுமை என்ற
இரு சத்திகளுக்கும் போர் நடக்கிறது. எழுத்தாளர்களின் பேனா முனைகளே அப்போரிலே உபயோகமாகும் போர்க்
கருவிகள்.
-அறிஞர் அண்ணா
3.கடிகாரத்தை கவனித்து நடக்கிற மேனாட்டினர் முன்னேற்றத்தின் உச்சியில் இருகின்றனர். பஞ்சாங்கத்தைப் பார்த்துப் வாழ்கிற நாம் பின்னேற்றத்தின் கடைக்கோடியில் இருக்கிறோம்.
-அறிஞர் அண்ணா
4.ஓராயிரம் ஆபத்துகள் ஓயாமல்
நம்மை நோக்கி வருவதாயினும் சரியே. நம் உள்ளம்
உண்மையென்று உணர்ந்ததை உரைக்க
அஞ்சுபவன் கோழை கோழை
மட்டுமல்ல நாட்டுத் துரோகி.
-அறிஞர் அண்ணா
5.பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு
செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.
-அறிஞர் அண்ணா
6.நான் எப்போழுதுமே கடவுளிடம் உண்மையான நம்பிக்கையுடன் வாதாடுபவன்.
-அறிஞர் அண்ணா
7.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
-அறிஞர் அண்ணா
8.வன்முறை இருபுறம் கூர்மையான ஆயுதம்
-அறிஞர் அண்ணா
9.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தங்களுக்குத் தாங்களே நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொண்டால் மட்டும் போதாது; தேர்ந்தெடுத்த மக்களுக்கும் நம்பிக்கை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
-அறிஞர் அண்ணா
10.நல்ல வரலாறுகளைப் படித்தால்தான் இளம் உள்ளத்தில் புது
முறுக்கு ஏற்படும்.
-அறிஞர் அண்ணா
11.தன்னை வென்றவன் தரணியை
வெல்வான்.
-அறிஞர் அண்ணா
12.எதிரிகள் தாக்கித் தாக்கி
தங்கள் வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித் தாங்கி
வலுவைப் பெற்றுக்கொள்ளுங்கள்
-அறிஞர் அண்ணா
13.எவ்வளவு கட்டிடங்கள் கட்டினாலும், விஞ்ஞான கூடங்கள் அமைத்தாலும், புது பூங்கா அமைத்தாலும் கல்விச் செல்வம் இல்லாவிடில் அவை பயன் தரமாட்டா.
-அறிஞர் அண்ணா
14.சட்டம் ஓர் இருட்டறை! அதில் வக்கீலின் வாதம்
ஓர் விளக்கு! அந்தப்
பிரகாசமான விளக்கு ஏழைகளுக்குக் கிடைப்பதில்லை.
-அறிஞர் அண்ணா
15.பழைய காலத்தைப் போல
நாம் நடக்க முடியாது. நடக்கத் தேவையுமில்லை. புதிய கருத்துக்களைத் தைரியத்துடன் கவனித்து ஏற்று புதுவாழ்வு நடத்த நம்மை நாம்
தயாராக்கிக்கொள்ளவேண்டும்.
-அறிஞர் அண்ணா
16.அழகு ஒரு ஆபத்தான ஆயுதம். அதனால் ஆளப்படுபவர்கள் ஆண்கள்,
ஆள்பவர்கள் பெண்கள்.
-அறிஞர் அண்ணா
17.ஒரு சனநாயக சமுதாயத்தில், கருத்துக்களைச் சொல்வதற்கு தடையோ,
சுதந்திர உணர்வுகளுக்கு அழிவு தரும்
நடைமுறைகளோ கண்டிப்பாக இருக்கக் கூடாது.
-அறிஞர் அண்ணா
18.உழைப்பே செல்வம், உழைப்பார்க்கே உரிமையெல்லாம். உழைப்பாளிகளுக்கே இந்த உலகம்
உரியது.
-அறிஞர் அண்ணா
19.அஞ்சாநெஞ்சு படைத்த இலட்சியவாதிகள் தான்
ஒரு நாட்டிற்கு கிடைக்கக் கூடிய ஒப்பற்ற செல்வங்கள்.
-அறிஞர் அண்ணா
20.பாடத்திட்டத்தில் பகுத்தறிவைப் புகுத்தினால்தான் மக்களுக்கு பழமையிடத்திலுள்ள பாசம்
குறையும், மனத்திலுள்ள மாசு
நீங்கும், காலத்திற்குத் தக்கதுபோல கருத்து வளரும்.
-அறிஞர் அண்ணா
21.ஒரே குடும்பத்தின் மணிகளிலே ஒன்று
மாணிக்கமாக்கப்பட்டு மற்றொன்று, மண்ணாங்கட்டியாக்கப்படுகிறது. சொத்து
சுதந்திரம் ஆணுக்கு, சமயற்கட்டிலே வேகவும், சயனக்கிரகத்தில் சாயவும் பெண்.
-அறிஞர் அண்ணா
22.வாழ்கை ஒரு பாறை,
உங்களிடம் அறிவு என்ற
உளி இருக்கிறது. அழகாக
சிற்பமாக வடித்து ரசிப்பதற்கு என்ன?
-அறிஞர் அண்ணா
23.சமூகப் புரட்சிப் பணியிலே ஈடுபட்டவர்களுடைய வாழ்க்கை துன்பமானதுதான். ஆனால்
அவர்களது பெயர் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது.
-அறிஞர் அண்ணா
24.ஒரு நாடு சுபிட்சத்துடன் வாழவேண்டுமானால் அந்நாட்டு மக்கள் ஒழுக்கமுள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.
-அறிஞர் அண்ணா
25.விதியை நம்பி, மதியைப் பறிகொடுத்து, பகுத்தறிவற்ற மனிதர்களாய் வாழ்வது மிகமிகக் கேடு, தீங்கு.
-அறிஞர் அண்ணா
26.மோரை கடைந்து வெண்ணெய் எடுப்பதுபோல அறிவை வளர்த்துக்கொண்டு பலன்
பெறவேண்டும்.
-அறிஞர் அண்ணா
அறிஞர் அண்ணா உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Arignar Anna Motivational Quotes in Tamil