ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உற்சாகமூட்டும்
வார்த்தைகள்
Albert Einstein Motivational Quotes in Tamil
1.தொழில்நுட்பம் மனித உறவுகளை மிஞ்சும்போது இந்த உலகம்
முட்டாள்களால் நிறைந்திருக்கும்
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
2.அறிவை விட கற்பனை
முக்கியமானது. அது, நம்மை
உறுதியாக நம்ப வைத்து
இருபது மடங்கு ஆற்றலுடன் இலட்சியத்தை அடையச் செயல்
வீரராக உருவாக்கிவிடும் சக்தி படைத்தது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
3.தனி மனிதனின் தனி
உரிமையான சிந்தனையால் சாதிக்க முடியாதது என்று எதுவுமில்லை.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
4.இந்த உலகம் அபாயகரமான இடம். தீங்கு, தீமை
செய்பவர்களால் அல்ல. ஆனால்
இவர்களைப் பார்த்து கொண்டு
ஒன்றும் செய்யாமல் இருக்கிறார்களே அவர்களால்தான்!
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
5.வெற்றிபெற்ற மனிதனாக ஆவதற்கு முயற்சி செய்யாதீர்கள்! மாறாக மதிப்புமிக்க மனிதனாக மாற முயலுங்கள்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
6.தேடுதலும், உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற விடாமுயற்சியும் தெளிந்த அறிவும் உங்களை உயர்ந்தோனாக்கிக் காட்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
7.அமைதி என்பது ஆழமான
புரிதலினால் ஏற்படுவது, அதை
ஒருபோதும் அடக்குமுறையால் ஏற்படுத்திவிட முடியாது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
8.பள்ளியில் தான் கற்ற
அனைத்தையும் மறந்துவிட்ட பின்பும் ஒருவனிடம் எஞ்சியிருப்பது எதுவோ, அதுவே
உண்மையில் அவன் கற்ற
கல்வி
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
9.மனிதன் நிச்சயமாக ஒரு
முழுப் பைத்தியக்காரன்தான் அவனால் ஒரு
புழுவைக்கூட உண்டாக்க முடியாது. ஆனால் டஜன் கணக்கில் கடவுளை உண்டாக்கிக் கொண்டேயிருப்பான்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
10.துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
11.அறிவை ஆனந்தமாக போதிக்க கற்றவனே அற்புதமான ஆசிரியன்
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
12.எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம்
வாழ்வில் புதிய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
13.படித்தவர்கள் அதிகரித்துவிட்ட இந்த காலத்தில் நல்லவர்கள் தேவைப்படுகிறார்கள் நல்ல தன்மையில்லாத அறிவாளியினால் தொல்லைகளே விளையும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
14.மற்றவர்களுக்காக வாழும் வாழ்க்கையே, ஒரு பயனுள்ள வாழ்க்கையாகிறது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
15.நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன்
பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு
எண்ணச் சொல்லிக் கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி
நாம் மிகப்பெரிய அறிவியல் கண்டுபிடிப்புகளையெல்லாம் கண்டுபிடித்திருக்க இயலாது
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
16.வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றிமீது உள்ள தாகத்தால் அதை
இழந்துவிட அனுமதிக்கக்கூடாது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
17.சிறந்த பல சிந்தனைகள் தோன்றத் துணை புரிவது தனிமை தான். தனிமையான சூழ்நிலையில் தரமான எண்ணங்கள் தோன்றக்கூடும். இனிய எண்ணங்களின் விளைவாக நல்ல பல
செயல்கள் மலரும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
18.ஒரு விஷயம் ஆழமாக
பார்க்கப்படுவதால் மட்டுமே அதனைப்பற்றிய முழுமையான புரிதல் உண்டாகிறது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
19.ஒருவன் நன்றாக முன்னால் தாண்டிக் குதிக்க வேண்டும் என்றால், அதற்காகப் பின்னாலும் போகத்தான் வேண்டும்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
20.புத்தி கூர்மையின் உண்மையான அறிகுறி அறிவு சம்பந்தப்பட்டதல்ல, அது
கற்பனைத்திறனுடன் தொடர்புடையது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
21.ஒரு பிரச்சினை எந்த
வழியில் ஏற்பட்டதோ, அதே
வழியில் அதற்கான தீர்வைப்பற்றி யோசிக்கும்போது நம்மால் அதை
தீர்க்கமுடியாது.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
22.முட்டாள்களுக்கும் மேதைகளுக்கும் உள்ள வித்தியாசம், மேதைகள் எப்போதும் அவர்களின் எல்லை என்னவென்று அறிந்தவர்கள்.
-ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Albert Einstein Motivational Quotes in Tamil