கன்பூசியஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Confucius Motivational Quotes in Tamil
1.சிறிய
தவறுகளை திருத்தி
கொள்ளாவிட்டால் பெரிய
தவறுகளைத் தவிர்க்க
முடியாது.
-கன்பூசியஸ்
2.தனக்குத் தெரிந்ததை
தெரியும் என்றும்,
தெரியாததை தெரியாது
என்றும் அறிவதுதான்
அறிவு.
-கன்பூசியஸ்
3.தீயவற்றின்
உற்பத்தி சாலை
இதயம்; தீயனவற்றை
விற்குமிடமே நாக்கு
-கன்பூசியஸ்
4.நீ
ஓழுக்கம் உள்ளவனாக
இருந்தால் கவலையே
வராது.
நீ அறிவாளியாக
இருந்தால் குழப்பம்
வராது.
நீ துணிவுள்ளவனாக
இருந்தால் அச்சம்
வராது.
-கன்பூசியஸ்
5.சிறிய
விஷயங்களில் பொறுமை
காட்டா விட்டால்
பெரிய காரியங்கள்
கெட்டுப் போகின்றன
-கன்பூசியஸ்
6.உங்களுக்கு
சரியான ஆலோசனை
வழங்கக் கூடிய
பெரிய மனிதர்
உங்களைத் தவிர
வேறு யாராகவும்
இருக்க முடியாது
-கன்பூசியஸ்
7.பயத்தை
மனதிற்குள்ளேயே பயிர்
செய்பவன் பாம்பை
மனதில் வளர்க்கிறான்.
-கன்பூசியஸ்
8.ஓர்
ஏழையின் செல்வம்
அவனது திறமைதான்.
-கன்பூசியஸ்
9.நாம்
நம் செயல்களைத்
தீர்மானிக்கும் அளவிற்கு
நம் செயல்களும்
நம்மைத் தீர்மானிக்கின்றன
-கன்பூசியஸ்
10.இரக்கமுள்ள
நெஞ்சில் அன்பு
பிறக்கும், நாணமுள்ள
நெஞ்சில் அறம்
பிறக்கும்.
-கன்பூசியஸ்
11.ஒவ்வொன்றும்
அழகுடையதே. ஆனால்
எல்லார் கண்களும்
அதைக் காண்பதில்லை
-கன்பூசியஸ்
12.அறிஞர்கள்
சித்தனை செய்யாதிருந்து
அறிவிலிகள் ஆகிறார்கள்.
அறிவிலிகள் சிந்தனை
செய்து அறிஞர்கள்
ஆகுகிறார்கள்.
-கன்பூசியஸ்
13.மனதைக்
கடமையில் செலுத்துங்கள்.
ஒழுக்கத்தைக் கடைபிடிங்கள்.
அன்புக்குக் கட்டுப்படுங்கள்.
மேலான கலைகளில்
மனதை செலுத்தி
அமைதி பெறுங்கள்
-கன்பூசியஸ்
14.நீங்கள்
செய்யும் தவறை
உடனே திருத்திக்
கொள்ளுங்கள். இல்லாவிட்டால்
இன்னொரு தவறைச்
செய்தவராகி விடுவீர்கள்
-கன்பூசியஸ்
15.உன்னத
நெறிகளையும், உயர்ந்த
மதியும், நேர்மையும்
கொண்டவரே உயர்ந்த
மனிதர்.
-கன்பூசியஸ்
16.புகழைப் பொருட்படுத்தாதீர்கள்
ஆனால் புகழ்
பெறுவதற்குத் தகுதி
உடையவராக உங்களை
உருவாக்கிக்கொள்ளுங்கள்.
-கன்பூசியஸ்
17.நேர்மையும்
சத்தியமுமே ஒவ்வொரு
பண்புக்கும் அடிப்படை.
-கன்பூசியஸ்
18.நீ வாயைத்
திறக்கும் போதெல்லாம்
உன் உள்ளத்தைத்
திறக்கிறாய். ஆகவே,
கவனமாக இரு.
-கன்பூசியஸ்
19.கோபம்
தலைதூக்கும்போது, அதன்
பின்விளைவுகளைச் சிந்தித்துப்
பாருங்கள்.
-கன்பூசியஸ்
20.மனித
சமூகம் மதிக்காதிருந்தபோதும்
மனம் மாறாதிருப்பதே
மாட்சி.
-கன்பூசியஸ்
21.உங்களுக்கு
எதை மற்றவர்
செய்தால் நீங்கள்
அதை விரும்பமாட்டீர்களோ
அதை நீங்களும்
மற்றவர்களுக்குச் செய்யாதீர்கள்.
-கன்பூசியஸ்
22.சிறந்த
மனிதத் தன்மை
அல்லது மேன்மைக்குணம்
என்பது தொடுவானத்தில்
எட்டாத தொலைவில்
இருக்கின்ற இலட்சியம்
அல்ல. நீங்கள்
விரும்பினால் போதும்
அது உங்கள்
கைக்கு எளிதாக
கிடைத்துவிடும்.
-கன்பூசியஸ்
23.உயர்ந்த
குணமுள்ள மனிதன்
தான் எதைப்பற்றி
யாரிடம் பேசுகிறோம்
என்பதைக் குறித்து
மிகுந்த கவனம்
செலுத்துவான்.
-கன்பூசியஸ்
24.கண்ணியமான
மனிதன் தன்னைத்
தானே குறை
கூறிக் கொள்வான்,
சாதாரண மனிதன்
பிறரை குறை
கூறுவான்.
-கன்பூசியஸ்
25.விவேகமான
மற்றும் முட்டாள்தனமான
மனிதர்களை மட்டும்
ஒருபோதும் மாற்ற
முடியாது.
-கன்பூசியஸ்
26.பெற்றோருக்கான
தொண்டு மேலோரிடம்
மரியாதை, நண்பர்களிடம்
நல்லுறவு நாட்டுக்கான
அர்ப்பணிப்பு கொண்டவனே
உண்மையில் கற்றறிந்தவனாவான்.
-கன்பூசியஸ்
27.இருட்டை சபித்துக்
கொண்டிருப்பதை விட்டுவிட்டு
ஒரு சிறு
மெழுகுவர்த்தியை ஏற்றுங்கள்.
-கன்பூசியஸ்
28.உனது
வீட்டில் எளிமையாகவும்,
பணிவாகவும் இரு.
தொழில் செய்யும்
இடத்தில மதிப்போடு
இரு, பழகுபவர்களிடம்
விசுவாசத்தோடு நடந்துகொள்.
நீ காட்டுமிராண்டிகளிடையே
வசிக்க நேர்ந்தாலும்
இந்த நோக்கங்களைக்
கைவிட்டு விடாதே.
-கன்பூசியஸ்
29.தன்னுடைய
புறத்தோற்றத்தில் காட்டும்
அதே அளவு
அக்கறையை, தனது
நன்னடத்தையிலும் காட்டும்
மனிதனைத்தான் இந்த
உலகம் விரும்புகிறது.
-கன்பூசியஸ்
30.மனத்திடம்
இல்லாத மனிதனால்
வறுமையையும் சரி
செல்வநிலையையும் சரி
வெகுநாள் தாங்க
முடியாது.
-கன்பூசியஸ்
31.நான்
மாறும்போது தானும்
மாறியும் நான்
தலையசைக்கும்போது தானும்
தலையசைக்கும் நண்பன்
எனக்குத் தேவையில்லை,
அதற்கு என்
நிழலே போதும்.
-கன்பூசியஸ்
கன்பூசியஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Confucius Motivational Quotes in Tamil