எபிக்டீடஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Epictetus Motivational Quotes in Tamil
1.நீங்கள்
என்னவாக வேண்டும்
என்பதை முதலில்
உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ளுங்கள்;
பின்பு நீங்கள்
என்ன செய்யவேண்டுமோ
அதை செய்யுங்கள்.
-எபிக்டீடஸ்
2.நமது
விருப்பத்தின் சக்திக்கு
அப்பாற்பட்ட விஷயங்களைப்
பற்றிய கவலைகளை
நிறுத்துவதே நமது
மகிழ்ச்சிக்கான ஒரே
வழி.
-எபிக்டீடஸ்
3.நாம்
விரும்பியபடி வாழும்
உரிமையை விட
வேறு சுதந்திரம்
ஏதாவது இருக்கிறதா?
வேறு எதுவுமில்லை.
-எபிக்டீடஸ்
4.மற்றொருவரின் தவறினால்
எப்பொழுது நீங்கள்
எரிச்சலடைகிறீர்களோ, அப்பொழுது
உங்கள் தவறுகளை
ஆராய்ந்துப் பாருங்கள்.
பிறகு உங்களது
கோபத்தை நீங்கள்
மறந்துவிடுவீர்கள்.
-எபிக்டீடஸ்
5.உங்களுக்கு
என்ன நடக்கிறது
என்பது பெரிய
விஷயமல்ல, அதற்கான
உங்களின் நடவடிக்கை
என்ன என்பதே
முக்கியம்.
-எபிக்டீடஸ்
6.நீங்கள்
என்ன சொல்லப்போகிறீர்கள்
என்பதற்கான அர்த்தத்தை
முதலில் அறிந்துகொள்ளுங்கள்,
பிறகு பேசுங்கள்.
-எபிக்டீடஸ்
7.அதிகமாகவோ
அல்லது அடிக்கடியோ
அல்லது ஆர்பாட்டமாகவோ
சிரிக்காதீர்கள்.
-எபிக்டீடஸ்
எபிக்டீடஸ் உற்சாகமூட்டும் வார்த்தைகள்
Epictetus Motivational Quotes in Tamil