ஜார்ஜ் பெர்னாட் ஷா உற்சாகமூட்டும் வார்த்தைகள் | George Bernard Shaw Motivational Quotes in Tamil
ஜார்ஜ் பெர்னாட் ஷா உற்சாகமூட்டும் வார்த்தைகள்
George Bernard Shaw Motivational Quotes in Tamil
1.தைரியமாக, தன்னம்பிக்கையுடன் இறுதிவரைப் போரிடுபவர்களுக்கு வாழ்வின் இருளான எல்லாவற்றையும் வெற்றி கொள்வது சாத்தியம்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
2.மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
3.மனிதர்களுள் இருவகையினர் உண்டு.
திறமையானவர்கள் ஒருவகை மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
4.பணப் பற்றாக்குறை அனைத்துத் தீமைகளுக்கும் வேர்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
5.மிருகங்கள் எனது நண்பர்கள், நான் எனது நண்பர்களை உண்பதில்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
6.உங்களுக்கு சிறப்பான ஆற்றல்
இருந்தால் உழைப்பு அந்த
ஆற்றலை மேலும் வளர்த்துப் பெருகச் செய்யும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
7.பெண்களில் இரண்டே பிரிவினர்தான். ஒன்று அழகானவர்கள், மற்றொன்று அழகற்றவர்கள் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
8.நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
9.பிறரை சீர்திருத்தும் கடமையைவிடத் தன்னைச் சீர்திருத்துவதே முதல் கடமை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
10.அதிகமான பொருள்களைப் பெறுவதை வெட்கமானதாகக் கருதும் மனிதனே
மரியாதைக்குரியவன் ஆகிவிடுகிறான்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
11.உயிருள்ளவரை உழைத்து வாழ
விரும்புகிறேன். உழைக்க உழைக்க
எனக்கு உயிர் வாழும்
விருப்பம் அதிகமாகிறது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
12.அனுபவம் ஒரு கடுமையான வாத்தியார், அது சோதனையைத் தந்த பிறகுதான் பாடத்தை போதிக்கிறது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
13.சந்தேகத்தை வெற்றி கொள்ளுங்கள், தோல்வியைத் தவிர்த்திடலாம்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
14.அறிவு என்பது நதியை
போன்றது அது எவ்வளவு ஆழமாக இருக்கிறதோ அந்த
அளவுக்கு அமைதியாக இருக்கும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
15.செய்ய முடிந்தவன் சாதிக்கிறான், செய்ய முடியாதவன் போதிக்கிறான்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
16.எதுவுமே செய்யாமல் வீணாகும் வாழ்க்கையைவிட, எதையாவது செய்யும்போது ஏற்படும் தவறுகள் மிகவும் பயனுள்ளதும், கண்ணியமானதும் கூட.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
17.சந்தர்ப்பம் வரும் என்பதை
நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். தங்களுக்குத் தேவையான சந்தர்ப்பங்களைத் தேடித் பெறுபவர்தான் வாழ்வில் முன்னேற்றம் காண்கிறார்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
18.முட்டாள்கள் செய்யும் ஒரே
புத்திசாலித்தனம் காதல். புத்திசாலிகள் செய்யும் ஒரே முட்டாள்தனம் காதல்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
19.முட்டாளுக்கு 'அமைதியாக இரு'
என்று சொல்வதைவிட உயர்ந்த அறிவுரை வேறு எதுவும் இல்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
20.அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட புத்திசாலியான எதிரியிடம் சேர்வது மேல்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
21.தவறான வழிதான் எப்பொழுதுமே பொருத்தமான வழியைப் போன்ற
தோற்றம் அளிக்கிறது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
22.சந்தர்ப்பத்தை உருவாக்குபவர்கள் வெற்றியடைகிறார்கள்
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
23.எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
24.பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
25.மற்றவர்கள் யாரையும் வெறுப்பது கொடுமையானது. மேலும் மற்றவர்கள் இருப்பதைக்கூட கவனிக்காமல் இருப்பது அதைவிடக் கொடுமையானது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
26.தனக்குத் தெரிந்தவற்றை மட்டும் மனிதன்
பேசுவானாகில் உலகில் முழு
அமைதி நிலவும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
27.நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அதை
பெறுவதில் கவனமாக இருங்கள். இல்லையென்றால் எதை பெறுகிறீர்களோ அதை விரும்பும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவீர்கள்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
28.நல்லவராய் இருப்பது நல்லது
தான். ஆனால் நல்லது
எது, கெட்டது எது
என்று தெரியாத நல்லவராய் இருப்பது மிக ஆபத்தானது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
29.உங்கள் குழந்தைகளை நல்லவர்களாக்க சிறந்த வழி, அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கச் செய்வதே.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
30.நல்ல புத்தகமே சிறந்த
நண்பன். உதவி தேவையான போதெல்லாம் நண்பர்களை நாடிச்
செல்வது போல துணை
வேண்டும்போதெல்லாம் புத்தகங்களை நாடிச்
செல்ல வேண்டும்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
31.செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை
கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
32.அடிப்பட்டவன் உன்னைத் திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம் எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன் மன்னிப்பதுமில்லை, மறப்பதுமில்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
33.சிறிய முட்டாள்தனம் மற்றும் நிறைய
ஆர்வம் ஆகியவற்றை மட்டும் கொண்டதே முதல் காதல்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
34.அமைதியான வாழ்வே ஆனந்த
வாழ்வு அமைதியான உள்ளமே
மகிழ்சிக் கடலின் எல்லை.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
35.வாழ்க்கை என்பது உங்களைக் கண்டுபிடிப்பதல்ல,
வாழ்க்கை என்பது உங்களை
உருவாக்குவதே!
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
36.ஒரே நேரத்தில் பத்து
செயல்களை செய்வதைவிட ஒரே
செயலை பத்து மடங்காகச் செய்வதற்கு முயற்சி செய்.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
37.ஒரு செயலைச் செய்ய
முடியாது என்பவர்கள் அச்செயலைச் செய்பவர்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடாது.
-ஜார்ஜ் பெர்னாட் ஷா
ஜார்ஜ் பெர்னாட் ஷா உற்சாகமூட்டும் வார்த்தைகள்
George Bernard Shaw Motivational Quotes in Tamil