Type Here to Get Search Results !

கண்ணதாசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள் | Kannadasan Motivational Quotes i...


கண்ணதாசன் உற்சாகமூட்டும் வார்த்தைகள்

Kannadasan  Motivational Quotes in Tamil 

1.எதையாவது ரொம்ப ஆசைப்படும்போது அதை இப்போது வைத்திருப்பவர் சந்தோஷமாகத்தான் இருக்கிறாரா என்று நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

-கண்ணதாசன்

2.கேட்கும்போது சிரிப்பு வரவேண்டும். சிந்தித்துப் பார்த்தால் அழுகை வரவேண்டும். அதுதான் நல்ல நகைச்சுவை.

 

-கண்ணதாசன்

 

3.கற்பனை உலகம், கண்ணில் காணும் உலகத்தைவிட சுவையானது. தங்கு தடையில்லாமல் எங்கேயும் போக முடிகிறது.

 

ஆனால், உள்ளம் காட்டுகிற இடமெல்லாம்  கைக்குக் கிடைத்து விடுவதில்லை.

 

-கண்ணதாசன்

 

 

 

4.அன்பிலே நண்பனை வெற்றிகொள், களத்திலே எதிரியை வெற்றிகொள், பண்பிலே சபையை வெற்றிகொள்.

 

-கண்ணதாசன்

 

5.நடத்தப்படும் படகு கரை வந்து சேர்கிறது.

சிதறி விழுந்த கட்டையும் காலங்கடந்தாவது கரைக்கு வந்து விடுகிறது.

 

முடியுமானால் படகாவோம்;

இல்லையென்றால் கட்டையாவோம்;

என்றேனும் ஒருநாள் கரை சேர்வோம்.

 

-கண்ணதாசன்

 

6.இந்த உலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும் வளரக் கூடிய ஒரே செடி, ஆசைதான்.

 

-கண்ணதாசன்

 

7.இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல, நூற்றுக்குத் தொண்ணூறு அனுபவத்தில் உதித்தவை.

 

-கண்ணதாசன்

 

8.பேராசைகள் பிடித்து அலையாதிருந்தால் பெரும்பான்மையோர் சிறிய முயற்சிகளில் கூட வெற்றியைக் காண்பார்கள்.

 

-கண்ணதாசன்

9.மனிதனுடைய திறமை பெரிதல்ல; கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கிறது.

 

-கண்ணதாசன்

 

10.தேவைக்காகக் கடன் வாங்கு, கிடைக்கிறதே என்பதற்காக வாங்காதே.

 

-கண்ணதாசன்

 

11.நல்லதே நினை, நல்லதே பேசு, நல்லதே கேள், நல்லதே நடக்கும்.

 

-கண்ணதாசன்

 

12.குற்றம் புரிந்தவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். குற்றத்திற்கு ஆட்பட்டவனும் தனக்கு நியாயம் கேட்கிறான். யாருக்கு அதை வழங்குவது என்பதை பணம் முடிவு செய்கிறது...!

 

-கண்ணதாசன்

 

13.ஒழுங்காகச் சம்பாதித்துப் பணக்காரனானவனும் குறைவு. உண்மையைப் பேசி பதவிக்கு வந்தவனும் குறைவு.

 

-கண்ணதாசன்

 

14.இருப்பது ஒரு பிடி அன்னமானாலும் தனக்கென இல்லாது பிள்ளைக்கு ஊட்டி மகிழ்பவளே தாய்!

 

-கண்ணதாசன்

15.அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது சிலபேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நிறையப்பேர் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்

 

-கண்ணதாசன்

 

16.வெற்றி பெற்றவர்கள் தோல்விக்காகக் காத்திருங்கள். தோல்வி யுற்றவர்கள் வெற்றிக்காகக் காத்திருங்கள்.

 

-கண்ணதாசன்

 

17.எதையும் யாரும் இன்னொருவருக்கு கொடுத்துவிட முடியும் ஆனால் இந்த நிம்மதியை மட்டும் மனிதன் தன்னிடமிருந்தே தான் பெற்றுக் கொள்ள முடியும்.

 

-கண்ணதாசன்

 

18.உன்னை அறிந்தால் - நீ

உன்னை அறிந்தால்

உலகத்தில் போராடலாம்!

உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்

தலை வணங்காமல் நீ வாழலாம்!!

 

-கண்ணதாசன்

 

19.கருத்து பழையதாயுமிருக்கலாம், பலர் கூறியதாயுமிருக்கலாம்.

ஆயினும் அது உயர்ந்த வகையில் அழகாய் கூறுபவனுக்கே உரியதாகும்.

 

-கண்ணதாசன்

 

20.தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால், பார்வையில் படுவதெல்லாம் சாதரணமாகத்தான் தோன்றும்.

 

-கண்ணதாசன்

 

21.அடக்கத்தின் மூலம் தோல்வியில் இருந்து மீண்டு வெற்றியுடன் முன்னேறியவர்கள் உண்டு

 

-கண்ணதாசன்

 

22.யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ளாதே. ஒருவேளை மாற நினைத்தால், ஓவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.

 

-கண்ணதாசன்

 

23.மரம்போல் மனிதன் வளருகிறான் என்பது பெருமையல்ல. மரம்போல் அவன் பயன்படுகிறானா என்பதே பெருமை.

 

-கண்ணதாசன்

 

24.அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது. எல்லாவற்றையும் இழந்த பிறகு எஞ்சி நிற்பதே.

 

-கண்ணதாசன்

 

25.எப்படியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சம்பாதித்த பணத்தை அனுபவிக்காமலேயே மாண்டு போகிறார்கள்.

 

-கண்ணதாசன்

 

26.தண்ணீரையும் நாம் குடிக்கிறோம்; பாலையும் குடிக்கிறோம். ஆனால் எதையும் 'குடி' என்று அழைப்பதில்லை. மதுவை மட்டும் 'குடி' என்கிறோம். ஏன்?

 

அது ஒன்றுதான் உயிரைக் குடிக்கிறது.

 

-கண்ணதாசன்

 

27.அழும்போது தனியாக இருந்து அழ வேண்டும். சிரிக்கும் போது நண்பர்களோடு இருந்து சிரிக்க வேண்டும். கூட்டத்தில் அழுதால் நடிப்பு என்பார்கள், தனிமையில் சிரித்தால் பைத்தியம் என்பார்கள்.

 

-கண்ணதாசன்

 

28.ஆண்டவன் கடலில் அலையைப் படைத்ததை விட வேகமாக பெண்ணுக்கு நாக்கைப் படைத்திருக்கிறான்.

 

-கண்ணதாசன்

 

29.எந்த பக்கமும் சேரக்கூடிய மனிதர்களிடம் விழிப்பாய் பழக வேண்டும்.

 

-கண்ணதாசன்

 

30.இந்த உலகத்தில் ஒவ்வொருவனின் முன்னேற்றத்துக்கும்  மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள் , அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு.

 

-கண்ணதாசன்

 

31.மனிதர்கள் பெறும் புகழ் இரண்டு வகைப்படும். ஒன்று பெற்றுச் சாவது இன்னொன்று செத்து பெறுவது. சரித்திரத்தில் நூற்றுக் கணக்கானவர்கள் பெற்றுச் செத்தவர்கள்; கோடிக் கணக்கானவர்கள் செத்து பெற்றவர்கள்.

 

-கண்ணதாசன்

 

32.அளவுக்கு மிஞ்சிய சாமார்த்தியம் முட்டாள் தனத்தில் தான் முடியும்.

 

-கண்ணதாசன்

 

33.துயரப்படுவோர் தான் அதிர்ஷ்டத்தின் ஆற்றலை ஒப்புக்கொள்வர்; இன்பமாயிருப்பவர்கள், தங்களுடைய முன்யோசனையும் தகுதியுமே காரணங்கள் என்பர்.

 

-கண்ணதாசன்

 

34.சில நேரங்களில் புத்தி வெற்றி பெறுகிறது. பல நேரங்களில் வெற்றியே புத்தியாகிவிடுகிறது.

 

-கண்ணதாசன்

 

 

35.ஒருவர், சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லிக் கொண்டிருக்கிறார் என்றால் அவர் மீது கோபப் படாதீர்கள். அவர் விதவிதமாகப் புதிது புதிதாக கதை பேசி மயக்கத் தெரியாதவர்.

 

-கண்ணதாசன்

 

36.காதல் மயக்கத்தில் தோன்றினால் மங்கும். அன்பில் தோன்றினால் பொங்கும்.

 

-கண்ணதாசன்

 

37.வாழ்க்கையில் முன்னேற வேண்டுமா? எந்த விமர்சனத்தையும் தாங்கிக் கொள்ளும் உள்ளம் வேண்டும்.

 

-கண்ணதாசன்

 

38.கலங்காதிரு மனமே! உன் கனவெல்லாம் நிஜமாகும் ஒரு தினமே!

 

-கண்ணதாசன்

 

39.நல்லொழுக்கம் உன்னை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்

 

-கண்ணதாசன்

 

40.ஏராளமான வாய்ப்புகள் வரும்போதுதான் ஒருவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

 

-கண்ணதாசன்

41.அறிவாளிகளுக்கு அறிவுதான் அதிகம். முட்டாளுக்குதான் அனுபவம் அதிகம்.

 

-கண்ணதாசன்

 

42.எதிரி எப்போதும் எதிரியே. நண்பன்தான் அடிக்கடி பரிசீலிக்கப்பட வேண்டும்.

 

-கண்ணதாசன்

 

43.உனக்கும் கீழே உள்ளவர் கோடி. நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு.

 

-கண்ணதாசன்

 

44.நெருப்பில் இறங்கிய பிறகு வெயிலுக்கு அஞ்சுவதில் அர்த்தமில்லை.

 

-கண்ணதாசன்

 

45.சாதாரண மனிதன் புகழ்பெறும்போது அவன் செய்த தவறுகளும் புகழ்பெறத் துவங்குகின்றன.

 

-கண்ணதாசன்

46.ஆசை புத்தியை மறைக்கும் போது அறிவு வேலை செய்யாமல் போகிறது.

 

-கண்ணதாசன்

 

47.நம் நாட்டில் எல்லோருமே நடிகர்கள். இதில் ஏன் சிலருக்கு மட்டும் பட்டம் தருகின்றனர்?

 

-கண்ணதாசன்

 

48.நம்பக்கூடாதவனை நம்பிக் கெடுவதும் தவறு, நம்பக் கூடியவனை நம்பாமல் கெடுவதும் தவறு.

 

-கண்ணதாசன்

 

49.அடைவதற்கு ஆசைப்படுகிறவன் இழப்பதற்கு தயாராய் இருக்க வேண்டும்.

 

-கண்ணதாசன்

 

50.நம்பி ஏமாறுவதை விட, சந்தேகப்பட்டு பரிசீலனை செய்து, பிறகு நம்புவதில் ஆபத்து அதிகமில்லை.

 

-கண்ணதாசன்

 

51.பிறருக்காக அழுகிறவன் கண்ணுக்கு உறவு தெரிகிறது, பிறந்து விட்டோமே என்று அழுகிறவன் கண்ணுக்கு துறவு தெரிகிறது.

 

-கண்ணதாசன்

 

52.சாக்கடை என்பது மோசமான பகுதிதான்; ஆனால், அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரே சாக்கடையாகிவிடும்.

 

-கண்ணதாசன்


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Matched Content